மல்லிப்பட்டினம் அருகே கண் சிமிட்டும் நொடியில் நடந்த கோர சம்பவம்..!!

Posted by - October 20, 2018

மல்லிப்பட்டினம் கட்டயபாலத்தில் இயங்கி வரும் இறால் பிளான்டில் வேலை செய்யும் கூலி தொழிலாளி ஒருவர் இன்று மாலை (20/10/2018) பணியை செய்து கொண்டிருக்கும் போது அவர் அணிந்திருந்த கைலி மோட்டாரில் சிக்கி அவருடைய காலும் சிக்கி விட்டது. பின்பு அவர் கால் முறிந்த நிலையில் மீட்டெடுக்கப்பட்டார். அவரை, மல்லிப்பட்டினம் சமுதாய நல மன்ற ஆம்புலன்ஸில் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆம்புலன்சை இயக்கி சென்ற சட்ட கல்லூரி மாணவர் ஹவாஜா அவர்கள் எங்களுக்கு தெரிவித்தது என்னவென்றால்

Read More

கோட்டையை இரண்டாம் நாளாக ஜொலிக்க வைத்த அதிரை WFC அணியினர்…

Posted by - October 20, 2018

கோட்டைப்பட்டினத்தில் கால்பந்து தொடர் போட்டி கடந்த (18/10/2018) வியாழக்கிழமை அன்று தொடங்கியது. இத்தொடர் போட்டியில் பல்வேறு அணிகள் சிறப்பாக விளையாடினர். அதைபோன்று முதல் ஆட்டமாக திருச்சி அணிக்கு எதிர் அணியாக அதிராம்பட்டினம் வெஸ்டன் புட்பால் கிளப் அணியினர் நேற்றைய தினம் மோதினர். இப்போட்டியில் முதல் சுற்றில் இரு அணியினரும் பூஜியம் கோல் கணக்கில் விளையாடினர். இரண்டாம் சுற்றில் அதிரை (WFC) அணியினர் திருச்சி அணியினர் விறுவிறுப்பாக விளையாடி ஆட்டத்தில் 2-0 கோல் கணக்கில் திருச்சியை வீழ்த்தி அதிரை

Read More

மதுக்கூரில் நடைபெற்ற சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி..!!

Posted by - October 20, 2018

கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) மற்றும் மதுக்கூர் காவல்நிலையம் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பேருந்து நிலையம் அருகில் இன்று (20/10/2018) சனிக்கிழமை காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி சேர்மன் ஜனாப் TAKA முகைதீன் மரைக்காயர் தலைமை தாங்கினார். மதுக்கூர் வர்த்தக சங்கம் தலைவர், திரு R. பன்னீர்செல்வம் அவர்களும், மதுக்கூர் காவல்துறை உதவி ஆய்வாளர் திரு R. மகேந்திரன் அவர்களும், மற்றும் மதுக்கூர் வருவாய் ஆய்வாளர் ஜனாப் S. சேக்

Read More

அழகிய மழையால் குளிர்ந்த அதிரை ![படங்கள்]

Posted by - October 20, 2018

தமிழகம் முழுவதும் வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதேபோல் அதிரை,மல்லிப்பட்டிணம், பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலை நேரத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. இன்றும் அதிரையில் காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து சுமார் 11.30 மணிமுதல் கனமழை பெய்ய ஆரம்பித்தது. இம்மழையால் அதிரை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Read More

பூதமங்களம் நகர கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் தேர்வு !

Posted by - October 20, 2018

திருவாரூர் மாவட்டம் பூதமங்களம் நகர கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று வெள்ளிக்கிழமை ( 19/10/2018 ) பூதமங்களத்தில் மாவட்ட தலைவர் அ.சர்வத் ரஃபீக் தலைமையில் நடைபெற்றது. இதில் நகர தலைவராக ஆரிஃபின், நகர செயலாளராக சர்வத் கான் மற்றும் இணை செயலாளராக மர்வான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள் . இக்கூட்டத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பூதமங்களம் நகர உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஆர்வமுடன் நிர்வாகிகளை தேர்வு செய்தனர்.

Read More

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் ரியாத் மண்டலம் நடத்திய 86வது இரத்ததான முகாம் ..!

Posted by - October 20, 2018

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் நடத்தும் 86வது இரத்ததான முகாம் சவுதி தலைநகர் ரியத்தில் கிங் பஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையில் நேற்று 19/10/2018 நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் பல நாடுகளில் பணி நிமித்தமாக சவூதியில் இருப்பவர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர். இந்நிகழ்வில் அதிரையை சேர்ந்த நண்பர்களும் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.

Read More

மாநாட்டு அழைப்பு பணியில் மல்லிப்பட்டிணம் நகர நிர்வாகிகள் தீவிரம்…!

Posted by - October 20, 2018

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் SDPI கட்சியினர் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டு அழைப்பு பணி தீவிரம். வருகின்ற அக் 21 அன்று திருச்சியில் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டை SDPI கட்சி அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் முதல் கிளை தொண்டரகள் வரை மாநாட்டிற்கான மக்களை சந்தித்து அழைத்து வருகின்றனர். நேற்று மல்லிப்பட்டிணம் நகரம் சார்பாக மாநாட்டிற்கு மல்லிப்பட்டிணம் ஜமாஅத்தார்கள்,தமிழக வாழ்வுரிமை கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் MTK பஷீர் அகமது,

Read More

கோட்டையை அசத்தி வரும் அதிரை WFC அணியினர்..!!

Posted by - October 20, 2018

கோட்டைப்பட்டினத்தில் கால்பந்து தொடர் போட்டி நேற்று முன் தினம் (18/10/2018) வியாழக்கிழமை அன்று தொடங்கியது. இத்தொடர் போட்டியில் பல்வேறு அணிகள் சிறப்பாக விளையாடினர். அதைபோன்று முதல் ஆட்டமாக திருச்சி அணிக்கு எதிர் அணியாக அதிராம்பட்டினம் வெஸ்டன் புட்பால் கிளப் அணியினர் போதினர். இப்போட்டியில் முதல் சுற்றில் இரு அணியினரும் பூஜியம் கோல் கணக்கில் விளையாடினர். இரண்டாம் சுற்றில் அதிரை (WFC) அணியினர் திருச்சி அணியினர் விறுவிறுப்பான ஆட்டத்தில் 2-0 கோல் கணக்கில் திருச்சியை வீழ்த்தி அதிரை WFC

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)