அதிகாரத்தின் பலத்தை பெற்று சமூகத்தை பலப்படுத்துவோம்! அதிரை இலியாஸ் அழைப்பு!!

Posted by - October 19, 2018

SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் இலியாஸ் விடுத்திருக்கும் அழைப்பில், “ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு திருச்சியில் உள்ள ஜி கார்னரில் வரும் 21ம் தேதி நடைபெறுகிறது. பசியற்ற இந்தியா பயமற்ற இந்தியாவை உருவாக்க கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் களத்தில் தூய பணியாற்றி வரும் SDPI கட்சி அறிவித்துள்ள இந்த ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு என்பது ஒடுக்கப்பட்ட மற்றும் வஞ்சிக்கப்பட்ட மக்களின் அரசியல் வரலாற்றில் மாபெரும் திருப்புமுனையாக அமைய உள்ளது. சுதந்திர போராட்ட

Read More

பிலால் நகர் பகுதியை பார்வையிட்ட அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் நிர்வாகிகள்..!!

Posted by - October 19, 2018

இன்று(19/10/2018) அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் நிர்வாகிகள் அதிராம்பட்டினம் பேரூராட்சி பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் அருகில் உள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சியை சேர்ந்த பிலால் நகர் பகுதியில் குப்பைகள் பராமரிப்பு, மழை நீர் வடியாமல் உள்ளது பற்றி ஆய்வு செய்தனர். பிலால் நகர் பகுதியில் பல இடங்களில் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. காலி மனைகளில் குப்பைகள் சேர்ந்துள்ளன. தொண்டு நிறுவனங்கள் வைத்திருக்கும் குப்பைத்தொட்டிகளில் குப்பைகள் அள்ளப்படவில்லை. தெர்மோகோல், மற்றும் டயர்களில் கொசுப்புழுக்கள் உற்பத்தி ஆகியுள்ளன.

Read More

CBD மதுக்கூர் கிளை நடத்தும் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி..!!

Posted by - October 19, 2018

கிரசண்ட் பிளட் டோனோர்ஸ் (மதுக்கூர் கிளை) மற்றும் மதுக்கூர் காவல் நிலையம் இணைந்து நடத்தும் “சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி”. இந்நிகழ்ச்சியில் வாகன விளக்குகளின் நடுவே கருப்பு ஸ்டிக்கர் ஓட்டுவதும், துண்டு பிரசுரங்கள் வழங்கவுள்ளனர். இந்நிகழ்ச்சியினை துவங்கி வைப்பதற்காக திரு. A.ஆனந்த தாண்டவம் (காவல்துறை ஆய்வாளர், மதுக்கூர்) வரவுள்ளர்கள். இதில் நிகழ்ச்சியினை தலைமை தாங்குபவர் பேராசிரியர்.k.செய்யது அகமது கபீர் அவர்கள் (CBD மாவட்ட தலைவர்), முன்னிலை வகிப்பவர் ஜனாப்.TAKA.முகைதீன் மரைக்காயர் அவர்கள் (சேர்மன்,பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி, பட்டுக்கோட்டை). திரு.R.

Read More

தடை விலகியதால் ரயில்வே மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது!!

Posted by - October 19, 2018

இராமநாதபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இதனையடுத்து இன்று இராமநாதபுரம் – கீழக்கரை ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்காக காலை 11 மணியளவில் அடிக்கள் நாட்டப்பட்டது. இந்த ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னால் இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், போரசிரியர் M.H.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வெட்டுத் தீர்மானம் வாயிலாகவும், சட்டமன்ற கேள்வி நேரத்திலும் பலமுறை வலியுறுத்தியதன் அடிப்படையில், அப்போதைய முதல்வர் மறைந்த ஜெயலலிதா அவர்கள் அதற்கு

Read More

பட்டுக்கோட்டை அருகே கோர விபத்து 30கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

Posted by - October 19, 2018

  பட்டுக்கோட்டை – தஞ்சை சாலையில் தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இன்று பகல் பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சையை நோக்கி சென்ற தனியார் பேருந்தும் – தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு புறப்பட்ட தனியார் பேருந்தும் ஒரத்தநாடு உளூர் கிராமம் அருகே கடக்க முன்றபொழுது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இக்கோரவிபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். உளூர் கிராம வாசிகள் கூறுகையில் – பட்டுக்கோட்டை – தஞ்சை சாலையில் தனியார்

Read More

ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு : அழைப்புப் பணியில் அதிரை SDPI தீவிரம்.!!

Posted by - October 19, 2018

  SDPI கட்சி நடத்தும் மாநாடு எதிர்வரும் (21/10/18) ஞாயிற்றுகிழமை அன்று திருச்சி மாநகரில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர். இம்மாநாட்டில் கலந்துகொள்ளுவதற்கு SDPI கட்சி சார்பாக மாவட்ட வாரியாக மாவட்ட தலைவர்கள் உறுப்பினர்கள் அழைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியிலும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு நேரில் சென்று நடக்க இருக்கும் மாநாட்டிற்கான அழைப்பினை தீவிரமாக செய்துவருகின்றனர். இதில்

Read More

மணமக்கள் செண்டு மேளம் இசைக்க மாட்டு வண்டியில் ராஜ பவனி..!

Posted by - October 19, 2018

கும்பகோணம்: சுற்றுப்புறம் மாசுபடுவதை தவிர்க்கவும், பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மாட்டு வண்டியில் நடைபெற்ற மணமகள் அழைப்பு நிகழ்ச்சி பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. திருமண நிகழ்வின் போது மாப்பிள்ளை அழைப்பு, மணமகள் அழைப்பு அனைத்தும் கார்களிலேயே நடைபெற்று வருகிறது. இதற்கு மாற்றாக கும்பகோணம் அருகில் உள்ள பாபநாசத்தில் திருமணதிற்காக நேற்று இரவு மாட்டு வண்டியில் மணமக்கள் அழைப்பு நடைபெற்றது. மணமக்கள் இருவரும் கம்ப்யூட்டர் பொறியாளர்களாக சென்னையில் பணியாற்றி வருகின்றனர். மணமகனே மாட்டு வண்டியை ஓட்டி வந்தார்.

Read More

அதிரையில் ஓட்டுநர் சங்கம் நடத்தி சிரிக்க வைத்த நகைச்சுவை பட்டிமன்றம்…!!

Posted by - October 19, 2018

தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை விவமர்சியாக கொண்டாடப்பட்டது. இதில் நேற்று வியாழக்கிழமை அன்று ஆயுத பூஜை பண்டிகையில் பைக், கார் மட்டுமின்றி சிறுவர்களின் சைக்கிள்கள் வரை பூஜை போட்டு கொண்டாடினர். அதைப்போல் பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சி, பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தினர். அதைப்போல் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் அதிரை ஓட்டுநர் சங்கம் சார்பில் பட்டிமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அண்ணா சிங்கார வேலு நடுவராக பல்வேறு பேச்சாளர்கள் சிரிக்க வைத்து பட்டிமன்றதை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)