சுவரொட்டியால் அதிரையில் பதற்றம்!!

Posted by - October 10, 2018

அதிரையில் எதிர் வரும் (12-10-2018)வெள்ளிக்கிழமை இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்கிற தலைப்பில் கேள்வி பதில் நிகழ்ச்சி அதிரை தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற உள்ளது. இந்த கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு இஸ்லாம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க இருக்கும் நிலையில் இன்று இரவு அதிரையில் உள்ள பெரும்பாலான இடங்களில் சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அதில் பி.ஜைனுல் ஆபிதீன் அதிரைக்குள் வர விட கூடாது என்பன வாசகங்கள் அடங்கியுள்ளது மட்டுமின்றி

Read More

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பெயர் மாற்றம்

Posted by - October 10, 2018

கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பெயர் இன்று முதல் புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா சென்னை நந்தனம் பகுதியில் அண்மையில் நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர். புகழை பறைசாற்றும் வகையில் அரசு சார்பில் நாணயம், அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பெயர் புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Read More

பட்டிப்பார்க்க வேண்டிய அதிரை-பட்டுக்கோட்டை புதிய தார் சாலை…

Posted by - October 10, 2018

அதிராம்பட்டினத்தில் இருந்து தினந்தோறும் ஏராளமான மக்கள் பணி நிமித்தமாக பட்டுக்கோட்டைக்கு சென்று வருகின்றனர். அதனால் இப்பாதை எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில் புதிதாக சாலைகள்.அமைக்க பகுதி வாரியாக தனியாருக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டது. சாலைகள் போடப்பட்டு ஒருமாதம் கூட ஆகாத நிலையில் ஆங்காங்கே சிதிலமடைந்து சின்னாபின்னமாகி உள்ளன. அந்த வகையில் காளி கோவில் எதிரே புதிய தார்சாலை சேதமடைந்து போக்கு வாரத்திற்கு இடையூறாக உள்ளன. கோடி ரூபாயானாலும் கேடிகளுக்கு போக மீதத்தில் தான் தார் சாலை

Read More

மரண அறிவிப்பு : மஹ்மூதா அவர்கள் ![வயது-75]

Posted by - October 10, 2018

மரண அறிவிப்பு : பழஞ்செட்டித்தெருவைச் சேர்ந்த கொ.அபூபக்கர் ஆலிம் அவர்களின் மகளும், அ.மு.க.அப்துல் சுக்கூர் ஆலிம் அவர்களின் மனைவியும், யாக்கூப் ஹசன் ஹாபீஸ், இஸ்ஹாக், இபுராகீம் ஆலிம், இஸ்மாயீல் ஹாபீஸ், சரீப் ஹாபிஸ் இவர்களின் தாயாருமாகிய மஹ்மூதா(வயது-75) அவர்கள் பழஞ்செட்டித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா லுஹர் தொழுகைக்குப் பிறகு மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)