புதுப்பட்டிணம் ஊராட்சியில் மழைக்கால முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்….!

Posted by - October 6, 2018

தமிழகம் முழுவதும் பருவ மழை தொடங்க இருப்பதாலும், புதுப்பட்டிணம் பகுதிகளில் மழைபெய்து வருவதாலும் மழை,வெள்ள முன்னேற்பாடு பணிகளை அரசு அதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளனர். புதுப்பட்டிணம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடிகால் பகுதிகளை தூர்வாரி மழை நீர் கடலில் கலக்குவதற்கு ஏற்ற வகையில் அமைத்து,குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து குளோரினேசன் செய்தல்,பைப் லைன் பழுது நீக்கம் செய்தல்,நீர் குடியிருப்பு பகுதிகளில் புகா வண்ணம் மணல் மூட்டைகள் ஏற்பாடு, பேரிடம் பாதுகாப்பு மையங்கள் ஏற்பாடு உள்ளிட்ட பணிகள் போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

Read More

தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்..!!

Posted by - October 6, 2018

தமிழகத்திற்கு நாளை விடுக்கப்பட்டிருந்த “ரெட் அலர்ட்” எனப்படும் வானிலை தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்படுவதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை மிகமோசமான வானிலை நிலவும், அதிகன மழை பெய்யும், அது தொடர்பான பாதிப்புகளால் உயிருக்கும், உடைமைகளுக்கும் சேதம் ஏற்படக் கூடும் என்பதைக் குறிக்கும் வகையில், இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எனப்படும் சிவப்பு எச்சரிக்கை பிறப்பித்திருந்தது. அந்த எச்சரிக்கை அறிவிப்பில், இந்திய வரைபடத்தில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுமே சிவப்பு

Read More

அதிரையில் தயார் நிலையில் பேரூராட்சி ஊழியர்கள்..!!

Posted by - October 6, 2018

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சியில் தயார் நிலையில் ஊழியர்கள் தற்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.தமிழக அரசு, மாவட்ட நிர்வாகங்கள்,அரசு அதிகாரிகள் மழை, வெள்ள பாதிப்பின்றி மக்களை பாதுகாக்க அறிவுறுத்தியுள்ளது. அதிரையில் மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது.இதையொட்டி அதிரை பேரூராட்சி நிர்வாகத்தினர் மணல் மூட்டைகள், உள்ளிட்ட வெள்ள தடுப்பு பொருட்களை போர்கால அடிப்படையில் தயார்படுத்தி வைத்துள்ளனர். மேலும் களப்பணியாற்ற ஊழியர்களையும் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

Read More

BREAKING : 5 மாநில சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிப்பு !

Posted by - October 6, 2018

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, சட்டிஸ்கர் மற்றும் மிஸோரம் மாநில சட்டசபைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நவம்பர் 12ம் தேதி முதல் கட்ட தேர்தலை சட்டிஸ்கர் சந்திக்கிறது. நவம்பர் 20ம் தேதி 2வது கட்ட தேர்தல் நடைபெறும். நவம்பர் 28ல் மத்தியபிரதேசம் மற்றும் மிஸோரம் தேர்தல் நடைபெறும். தெலுங்கானாவுக்கு டிசம்பர் 7 தேர்தல் நடைபெறும். அதே நாளில் ராஜஸ்தானுக்கும் தேர்தல் நடைபெறும். தேர்தல் அட்டவணை இதுதான்: 18 தொகுதிகளுக்கு சட்டீஸ்கரில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும். வேட்புமனு தாக்கல்

Read More

அதிரையில் மலேரியா டெங்கு பரவும் அபாயம் !! நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி நிர்வாகம் ?

Posted by - October 6, 2018

அதிராம்பட்டினம் பேரூராட்சியின் 7வது வார்டு ஆறுமுக கிட்டங்கி தெருவில் பொதுமக்கள் ஒரு தனியார் நிலத்தில் குப்பைகளை கொட்டி வந்துள்ளனர். இவ்வாறு குப்பையை கொட்டுவது தொடர்ந்து வந்துள்ளது. இந்நிலையில் அந்நிலத்தின் உரிமையாளர் அங்கு கொட்டப்பட்டிருந்த குப்பைகளை சுத்தம் செய்து ஓரிடத்தில் சேர்த்து வைத்துள்ளார். அக்குப்பைகளை அள்ளவேண்டிய அதிரை பேரூட்சியோ அதனை சுத்தம் செய்யாமல் அலட்சியம் செய்து வருகிறது. அதிரை பேரூராட்சியில் இது குறித்து புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அள்ளப்படாமல் கிடக்கும் குப்பைகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி

Read More

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும்- முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு..!

Posted by - October 6, 2018

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் கோடிக்கணக்கான தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்களும் தமிழகத்தின் மக்கள் பிரச்சினைகளில் பங்கெடுத்து வருகின்றனர். தமிழக மண்ணைக் காப்பாற்ற வேண்டும் என்று கடமை உணர்வு இங்கு இருப்போருக்கு மட்டுமல்ல, கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கும் இருக்கிறது. இதன் நிரூபணச் செயல்பாடுகள் தற்போது காணக் கிடைக்கின்றன. அந்த வகையில், குவைத்தில் வாழும் தமிழர்கள் சார்பில், ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்தவரும், குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் பொதுச்செயலாளருமான கலீல் பாகவீ என்பவர்

Read More

மல்லிப்பட்டினம் திப்புசுல்தான் தெருவில் குப்பைகள் அகற்றம்…!

Posted by - October 6, 2018

திப்புசுல்தான் தெருவில் குப்பைகள் நாலாபுறமும் சிதறிக்கிடந்த்து,மழை இரண்டு நாட்களாக பெய்து வருவதால் குப்பைகள் சேறும் சகதியுமாக மக்கள் அந்தப் பகுதியில் நடமாட முடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.மேலும் அந்த குப்பைகளினால் நோய் தொற்று பரவும் அபாயம் இருந்தது. ஊராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி இளைஞர்கள் கோரிக்கை வைத்தனர்.இதனையடுத்து இன்று காலை ஜேசிபி பொக்லைன் இயந்திரம் மூலம் அப்பகுதி இளைஞர்களின் உதவியோடு குப்பைகள் அகற்றப்பட்டது. அந்த பகுதிக்கு நிரந்தர குப்பைத்தொட்டி அமைக்கவேண்டும் என்றும் தொட்டி வைப்பதன் மூலம் மட்டுமே இதுபோன்ற குப்பைகள்

Read More

மல்லிப்பட்டினத்தில் இருள் சூழ்ந்து காணப்படும் புதுமனைத்தெரு…!

Posted by - October 6, 2018

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் ஊராட்சி புதுமனைத்தெரு பகுதிகளில் தெருவிளக்கு எரியாமல் இருண்டு காணப்படுகிறது. புதுமனைத்தெரு,கேஆர் காலணி போன்ற தெருப் பகுதிகளில் மின்கம்பத்தில் மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை.இதனால் இந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.மேலும் இருட்டாக இருப்பதால் நடந்துசெல்வதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.மேலும் இது மழைக்காலமாக இருப்பதால் பாம்பு போன்ற விஷ ஜந்துகள் அதிகமாக வெளியே வரக்கூடிய வாய்ப்பு உள்ளது.ஆகவே ஊராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் உடனடியாக மின்விளக்குகளை அமைத்து தரவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. ஷாபி இமாம்

Read More

ஆலடிகுலத்திற்கு பம்பிங் மோட்டார் மூலம் தண்ணீர் வரவுள்ளது..!!

Posted by - October 6, 2018

தஞ்சை மாவட்டம்;அதிராம்பட்டினம், ஆலடி குலத்திற்கு சாஸ்திர ஏரியிலிருந்து இரு தினங்களில் பம்பிங் மோட்டார் மூலம் தண்ணீர் வரவுள்ளது. சாஸ்திரா ஏரியிலிருந்து வருடாவருடம் அதிரை மின்வாரியம் துணையுடன் தண்ணீர் கொண்டுவரப்படுகின்றது குறிப்பிடத்தக்கது, அதுபோல் இவ்வருடமும் சாஸ்திரா ஏரியிலிருந்து தண்ணீரானது பம்பிங் மோட்டார் மூலம் கொண்டுவரபடவுள்ளது. தண்ணீர் வருவதற்கான முன்னேற்பாடுகள் இன்று காலை முதல் துவங்கப்பட்டளது. அதனைத்தொடர்ந்து இன்று(06/10/2018) காலை அதிரை பேரூராட்சி துப்புணர்வு பணியாளர்கள் மூலம் தண்ணீர் வருகின்ற பாதையினை சரி செய்யப்பட்டு வருகின்றனர். இதனை அதிராம்பட்டினம் பேரூராட்சி

Read More

மரண அறிவிப்பு (ஹாஜிமா பரக்கதுனிஷா)!!

Posted by - October 6, 2018

அதிராம்பட்டினம், பழஞ்செட்டி தெருவை சேர்ந்த மர்ஹும் நெ.பெ.ரி பெரியவாப்பு மரைக்காயர் அவர்களின் மூத்தமகனும் ஹாஜி SM ஷேக் மீரான் அவர்களின் மனைவியும் SMK நூர் முஹம்மது அவர்களின் மாமியாரும் SM அஹமது அன்வர் அவர்களின் தாயாருமான பரக்கத் நிஸா அவர்கள் இன்று(06/10/2018) காலை காலமாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் நல்லடக்கம் இன்று(06/10/2018) இஷா தொழுகைக்கு பின்னர் மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)