ரெட் அலர்ட் எச்சரிக்கை: அதிரை மீன்வர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!!

Posted by - October 4, 2018

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டார மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கடலோர காவல் துறையினர் மற்றும் மீன்வளத்துறை சார்பாக ஒலிபெருக்கி மூலம் தெரிவித்துவருகின்றனர். பருவ மழை துவங்கிய நிலையில் அதிரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழையானது நேற்று முதல் இரவில் தொடர் மழையும் பகலில் அவ்வப்போது விட்டுவிட்டு பெய்து வருகின்றது. தற்பொழுது இன்று(04/10/2018) இந்திய வானிலை ஆய்வு மையம் செய்தியரிக்கை ஒன்று வெளியிட்டிருந்தது. அதில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை(07/10/2018) அன்று கடலோர பகுதிகளில்

Read More

தென் மாநிலங்களில் பாஜகவுக்கு மிகப்பெரிய அடி காத்திருக்கிறது – சர்வே முடிவு !

Posted by - October 4, 2018

தென் மாநிலங்களில் பாஜகவுக்கு பெரும் தோல்வி காத்து கிடக்கிறது என ஏபிபி சர்வேயின் முடிவுகள் தெரிவிக்கின்றன. தேசத்தின் மனநிலை என்ற பெயரில் ஏபிபி தொலைக்காட்சி- சிவோட்டர் சர்வே நடத்தியுள்ளது. பல்வேறு அரசியல் விவாதங்களை முன்வைத்தும், அடுத்து நடக்க உள்ள தேர்தலை முன்வைத்தும் இந்த சர்வே நடத்தப்பட்டு இருக்கிறது. இதில் நாடாளுமன்றத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து மாநில வாரியான கருத்துக் கணிப்பை நடத்தியது. தென் மாநிலங்களில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு என்பது தெரியவந்துள்ளது.

Read More

பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு! எங்கே??

Posted by - October 4, 2018

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.2.50 குறைக்கப்படும் என நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு சார்பில் ரூ.2.50 குறைக்க அம்மாநில முதல்வர்களுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். அதன்டி பாஜக ஆளும் மாநிலமான உத்தர பிரதேசத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

Read More

தமிழகத்திற்கு பேராபத்து : வானிலை மையம் எச்சரிக்கை!!

Posted by - October 4, 2018

அன்மைக்காலமாக தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்தாலும் அவ்வப்போது மழை பெய்து வந்தது. தேனி, கம்பம், கோயம்புத்தூர் போன்ற ஒரு சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் காலை வரை பெரும்பாலான இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனையடுத்து தமிழகத்தில் வரும் 7 ம் தேதி மிகக் கனமழை பெய்யும் இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. அக்டோபர் 7 ம் தேதியன்று 25 செ.மீட்டருக்கும் அதிகமான

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)