மனிதர்களின் காட்சி சாலை…மிருகங்கள் வந்து பார்த்துவிட்டு போகின்றன ! – முதியோர் தினம்

Posted by - October 3, 2018

உலக முதியோர் தினம் அக்டோபர் 1ம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. ஊருக்கொரு முதியோர் இல்லங்கள் உள்ள இக்கால கட்டத்தில் முதியோர் தினம் தொடர்பான சிறப்புக்கட்டுரையை பார்ப்போம். இன்றைய காலகட்டத்தில் மூத்தோர் என்று சொன்னவுடன் அநேகருக்கு நினைவுவருவது முதியோர் இல்லங்கள்தான். பெற்றோரையே புறம்தள்ளி, கொடூரமான முறையில் நடத்தப்பட்டு, பின்னாளில் நமக்கும் வயதாகும் என்ற எண்ணமின்றி, இரக்கமற்ற இயந்திர மனிதர்களும் இந்த உலகில்தான் வாழ்கிறார்கள். கணவனால் கைவிடப்பட்டோர், பிள்ளைகளால் காக்கப்படாதோர், உறவினர்களால் ஏமாற்றப்பட்டோர் எனப் பெரும்பாலான முதியோர்கள் ரோட்டிலும்,

Read More

அதிரை அருகே 150 கிலோ கஞ்சா பறிமுதல், ஒருவர் கைது…..!

Posted by - October 3, 2018

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடல் வழியாக கஞ்சா கடத்துவதாக கடலோர காவல் படைக்கு தகவல் வந்ததது. இதனையடுத்து இன்று காலை கடலோர காவல்படையினர், ஊர்காவல் படையினர் செங்காங்காடு கடல் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு அம்பாசிடர் காரிலிருந்து அங்கு ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த படகு மூலம் கஞ்சா பொட்டலங்களை 5 பேர் ஏற்றி கடத்த முயன்றனர். போலீசாரை பார்த்ததும் 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். கார்த்திகேயன்(35) என்பவர் பிடிபட்டார். மேலும் கடத்தல் கும்பலிடமிருந்து 150 கிலோ

Read More

முறையான வடிகால் வசதி இல்லாததால் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர் ! நடவடிக்கை எடுக்கப்படுமா ?

Posted by - October 3, 2018

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் போன்ற பகுதிகளிலும் கடந்த இரு நாட்களாக மழை கொட்டி வருகிறது. இந்நிலையில் பட்டுக்கோட்டையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பேருந்து நிலையம் முழுவதும் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. முறையான வடிகால் வசதி இல்லாத காரணத்தினால் மழைநீரானது, பேருந்து நிலையம் முழுவதும் தேங்கி கிடக்கிறது. அதுமட்டுமின்றி தேங்கி கிடக்கும் மழைநீரால் தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இவ்விஷயத்தில்

Read More

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து திருவாரூரில் திமுக ஆர்பாட்டம்!!

Posted by - October 3, 2018

காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்ய திமுக தொண்டர்களுக்கு ஆனையிட்டார். இதனையடுத்து திருவாரூர் பேரூந்து நிலையத்தில் இன்று திமுக சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. திமுகவின் இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இருந்து காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட்,

Read More

நாசாவில் தங்கப்பதக்கத்துடன் பிரிலியண்ட் மாணவர்கள்!!

Posted by - October 3, 2018

அதிரையை அடுத்த புதுக்கோட்டை உள்ளூரில் உள்ள பிரிலியண்ட் பள்ளியில் ஒவ்வொரு வருடமும் (கடந்த வருடத்திலிருந்து) கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வது வழக்கம். அது போல இந்த வருடமும் மாணவ / மாணவிகளுக்கு கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. 14 மாணவர்கள் அமெரிக்க வின்வெளி ஆய்வகமான நாசாவிற்கு கடந்த 26 தேதி பள்ளித் தாளாளர் சுப்ரமணியன் தலைமையில் சென்றனர். பின்னர் அங்கு 3 நாட்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் விண்வெளி சோதனைகள், விண்வெளி வீரர்களாவதற்கு அளிக்கப்படும் பயிற்சி,

Read More

மல்லிப்பட்டினம் கிராம சபா கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு….!

Posted by - October 3, 2018

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் கிராம சபா கூட்டத்தில் ராஜிவ் காந்தி பஞ்சாயத் ராஜ் சங்கதன் அமைப்பின் வட்டார ஒருங்கிணைப்பாளர் அ.நூருல் அமீன் தலைமையில் மனு அளித்தனர். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மல்லிப்பட்டினம் கிராம பஞ்சாயத் சார்பாக கிராம சபா கூட்டம் நேற்று(2.10.2018) காலை 10 மணியளவில் தனி அலுவலர் தெட்சினா மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிலவும் பிரச்சனைகள்,குடிநீர் தட்டுப்பாடு,முறைகேடான தண்ணீர் குழாய் இணைப்பு,தெரு மின்விளக்கு எரியாமல் இருப்பது,மருத்துவமனை அமைத்தல்,சிறுவர் பூங்கா அமைத்தல்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)