இளம் சிறுமிக்கு மறுவாழ்வு கிடைக்க உதவிடுங்கள் !

Posted by - October 31, 2018

கோயம்புத்தூரைச் சேர்ந்த குதுபுதீன் மற்றும் காதர் ஜஹான் தம்பதியின் மகள் நப்ஸீன் பாத்திமா. இவருக்கு 13 வயதாகிறது. இந்நிலையில் இவருக்கு இருதயத்தில் ஏற்பட்ட நீர் கோர்வையால் மூன்று முறை மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதன்பின்னர் சிறுமி ஒரு சில மாதங்கள் உடல்நலம் பெற்று இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அச்சிறுமிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. பயந்துபோன அச்சிருமியின் பெற்றோர் மருத்துவரிடம் ஆலோசிக்கையில், அந்த சிறுமிக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய

Read More

அதிரையில் டெங்கு தடுப்பு நடவடிக்கை!

Posted by - October 31, 2018

தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் முயற்சியில் சுகாதாரத்துறையும் உள்ளாட்சித்துறையும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய நிலவேம்பு கசாயத்தை விநியோகம் செய்தனர்.

Read More

உயிருக்கு போராடும் அதிரை பெண்மணியின் மருத்துவ செலவிற்கு உதவிடுவீர் !

Posted by - October 31, 2018

அதிரை ஷிஃபா பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் வெளியூர் சென்று வந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட எதிர்பார்க்காத விபத்தில் மனைவிக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 4 நாட்கள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். ஆனால் திடீரென மருத்துவர் இங்கு பார்க்க முடியாது என கைவிரித்துள்ளார். இதையடுத்து அப்பெண் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பெண்ணிற்கு நுரையீரல், இதயம் மற்றும் தொடையில் ரத்தம் தேங்கியுள்ளதாகவும் அதனை சரி செய்தல் மட்டுமே அறுவை

Read More

மதுக்கூர் நகர SDPI கட்சியினர் நிலவேம்பு கசாயம் வினியோகம்…!

Posted by - October 31, 2018

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் நகர எஸ்டிபிஐ கட்சியினர் நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கினார்கள். தமிழகம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சியினர் டெங்கு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கி வருகின்றனர்.அதன்தொடர்ச்சியாக மதுக்கூர் நகரம் சார்பாக அக்கட்சியினர் மூன்று இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கினார்கள்.இதில் மாவட்ட பொதுச்செயலாளர் ரஹீஸ் கலந்துகொண்டார்.

Read More

மல்லிப்பட்டிணம் மனோரா அருகே இளம்பெண் சடலமாக மீட்பு….!

Posted by - October 31, 2018

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே மனோரா பாலத்தில் இளம்பெண் சடலமாக மீட்பு. புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலம் வடக்கைச் சேர்ந்த கஸ்தூரி.இவர் ஆலங்குடியில் பணிபுரிந்து வருகிறார். 29.10.2018 வேலைக்கு சென்ற இடத்தில் இருந்து கஸ்தூரியை கடத்திச் சென்று கை,கால்களை கட்டி மிக கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்து மல்லிப்பட்டினம் மனோரா பாலத்தில் வீசியுள்ளனர். நேற்று சடலத்தை கண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தினர்.மேலும் இது குறித்து

Read More

மல்லிப்பட்டினத்தில் நாற்றமடிக்கும் கூவம் உருவாக்க முயற்சியா?

Posted by - October 31, 2018

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள IVC ஐஸ் பிளாண்ட் அருகே கழிவு நீரால் துர்நாற்றம் வீசுகிறது. சாக்கடை கழிவுகள், மீன் கழிவுகள்,ஐஸ் பிளாண்டிலிருந்து வெளியேறும் கழிவுகள்,குப்பை கழிவுகள் என ஒட்டு மொத்த குப்பை கிடங்காகவும்,கழிவு நீர் தேக்கும் பகுதியாகவும் இருக்கிறது IVC ஐஸ் பிளாண்ட் அருகே. பொதுமக்கள், வாகன ஓட்டிகளும்,பெண்கள்,பள்ளி மாணவ,மாணவிகள் என பலரும் பயன்படுத்தும் பிரதான சாலையாகும்,இந்த கழிவுகளின் காரணமாக வெளியேறும் துர்நாற்றத்தால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.மேலும் அப்பகுதியில் இருக்கும் கழிவுகளால் டெங்கு,மலேரியா,சிக்குன்குனியா போன்ற

Read More

பட்டுக்கோட்டையில் குளத்தில் மூழ்கிய மூதாட்டியை காப்பாற்றிய தொண்டு அமைப்பினர் !

Posted by - October 31, 2018

பட்டுக்கோட்டையில் குளத்தில் மயங்கி விழுந்த ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பட்டுக்கோட்டை காசாங்குளத்தில் நேற்று செவ்வாய்கிழமை ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் மயக்கமடைந்து குளத்தில் விழுந்தார். அவருடைய பெயர் செல்லக்கண்ணு(வயது 68). குளத்தில் மயங்கி விழுந்த அவர் சுமார் அரைமணி நேரம் குளத்திலேயே மிதந்துள்ளார். இந்நிலையில் அங்கு இருந்த மக்கள் அளித்த தகவலின் பேரில் விதைகள் அமைப்பினரும், கலாம் நண்பர்கள் இயக்கத்தினரும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். உடனே அவர்கள் பட்டுக்கோட்டை தீயணைப்பு

Read More

அதிரையில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி தீவிரம்!!

Posted by - October 30, 2018

அதிராம்பட்டினம் பலஞ்செட்டி தெருவிற்கு அருகில் உள்ள சுப்ரமணியன் கோவில் தெருவில் இன்று (30.10.2018) அதிரை பேரூராட்சி சார்பாக மழைநீர் செல்லும் வடிகால் தூர்வாரும் பணி நடைப்பெற்றது. தற்பொழுது அதிரையில் பரவி வரும் நோயை தடுக்கவும், ஊரை தூய்மையாக்கவும் அதிரை மக்கள் சார்பாக பேரூராட்சிக்கு மனு அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் அதிரையில் பல இடங்களில் உள்ள மழைநீர் செல்லும் வடிகால்கள் தூர்வாரப்படுகிறது. இந்நிலையில் சுப்ரமணியன் கோவில் தெருவில் JCB மூலம் மழைநீர் செல்லும் வடிகால் தூர்வாரப்பட்டது. இதை அதிமுக அதிரை

Read More

மல்லிப்பட்டிணத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் நிலவேம்பு கசாயம் வினியோகம்…..!

Posted by - October 30, 2018

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் SDPI கட்சி சார்பாக நிலவேம்பு கசாயம் இன்று (30.10.2018) வினியோகம் செய்யப்பட்டது. டெங்கு,பன்றிக் காய்ச்சல்,வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் தமிழகத்தில் பரவி வரும் சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் எல்லா பகுதிகளிலும் SDPI கட்சியினர் நிலவேம்பு கசாயம் வழங்கி வருகின்றனர். அதன்தொடர்ச்சியாக மல்லிப்பட்டிணத்தில் ராமர்கோவில் தெரு,பள்ளிவாசல்,காசிம் அப்பா தெரு,கேஆர் காலணி,புதுமனைத் தெரு,காயிதே மில்லத் நகர் உள்ளிட்ட பத்து இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கினார்கள்.இதில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை குடித்தனர்.சில தெருக்களில் வீடுகளுக்கும் நேரடியாக சென்று

Read More

மரண அறிவிப்பு:- பெரிய தைக்கால் தெருவை சேர்ந்த மீரா அம்மாள்..!!

Posted by - October 30, 2018

அதிராம்பட்டினம், பெரிய தைக்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம் நன்னி பக்கீர் அவர்களின் மகளும், மீரா முஹைதீன், ஜகபர் அலி இவர்களின் சகோதரியும், காதர் உசேன் அவர்களின் சிறிய தாயாரும், அஸ்கர் அலி மாமியாரும், ஜகபர் அலி அவர்களின் மனைவியுமாகிய மீரா அம்மாள் அவர்கள் நேற்று(29/10/2018) இரவு 7 மணியளவில் வஃபாதாகிவிட்டார்கள். இனாலில்லாஹி வா இன்னாலிலைஹி ராஜுவூன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (30/10/2018) காலை 11 மணியளவில் மக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)