அதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா ![படங்கள்]

Posted by - September 29, 2018

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் கடந்த 17ஆம் தேதி முதல் தொடர் சேவை திட்டங்கள் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 11ஆம் நாளான இன்று அதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் காதிர்முகைதீன் கல்லூரி எக்ஸ்னோரா அமைப்பின் மாணவர்களுடன் இணைந்து அதிரை முத்தம்மாள் தெருவில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் கூண்டுவைத்து பராமரிக்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க தலைவர் பேரா.எம்.ஏ.அப்துல்காதர் தலைமை வகித்தார். கிராம நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், தில்லைநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவை லயன் டி.பி.கே.ராஜேந்திரன்

Read More

தஞ்சை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் ஆலோசனை கூட்டம் ![படங்கள்]

Posted by - September 29, 2018

தஞ்சை மாவாட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பாக அனைவருக்கும் வாக்குரிமை சிறப்பு பொதுக்குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கும்பகோணம் அரக்காசியம்மாள் ஜுமுஆ பள்ளியில் இன்று சனிக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரை இக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் மாநில பொதுச்செயலாளர் மெளலானா மெளலவி அல்ஹாஜ் Dr.V.S. அன்வர் பாதுஷாஹ் உலவி ph.D கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார். இக்கூட்டத்தில் தஞ்சை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையைச் சார்ந்த

Read More

மணல் கடத்தலை கண்காணிக்க சென்ற விராலிமலை தாசில்தார் விபத்தில் பலி !

Posted by - September 29, 2018

புதுக்கோட்டை அருகே மணல் கடத்தலை கண்காணிக்க விராலிமலை தாசில்தாரான பார்த்திபன் சென்றுள்ளார். செல்லும் வழியில் வாகனத்தின் டயர் திடீரென வெடித்து, வாகனம் மரத்தில் மோதியுள்ளது. இந்த எதிர்பாராத விபத்தில் படுகாயமடைந்த தாசில்தார், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

Read More

தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தம் மீனவ சங்கங்கள் அதிரடி முடிவு….!

Posted by - September 29, 2018

சென்னை காசிமேட்டில் மீனவ சங்கங்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதரங்கள் தொடர்ந்து கேள்விக்குறியாகி வருவதை குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து ஏற்றப்பட்டு வரும் டீசல் உயர்வை கண்டித்தும்,இலங்கையுடனான பிரச்சனையில் தீர்வு காணாததை கண்டித்தும் மற்றும் மாற்று தொழில் வழிவகை செய்திடக் கோரியும் வருகிற அக்டோபர் 3 முதல் தமிழக விசைப்படகு மீனவர் நலசங்கம், மீனவ சங்கங்கள் மற்றும் மீனவ கிராம பஞ்சாயத்கள் இணைந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு

Read More

தலைக்கணத்தில் ஆடும் சென்னை ராஹத் நிறுவனம் !

Posted by - September 29, 2018

அதிரைக்கு அகலப்பாதை அமைப்பதை அடுத்து நிறுத்தப்பட்ட தொடர்வண்டி சேவையால் செக்கடி டூ மன்னடி வரை பல்வேறு நிறுவன பேருந்துகள் இயக்கப்பட்டன. குறிப்பாக ராஹத் என்ற நிறுவனம் தனது சேவையில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் அப்பேருந்தை அதிரையைர்கள் வெகுவாக பயன்படுத்தி வருகின்றனர். இதில் பார்சல் புக்கிங் பிரதான ஒன்றாக மாற்றப்பட்டு செயல்படுகிறது, இதில் சென்னையில் இருந்து அதிரைக்கு பார்சல் புக்கிங் செய்தால் மதிப்பை விட பன் மடங்கு கட்டணம் வசூலித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்களை

Read More

செய்தி எதிரொலியாக அதிரையரின் ஆவணங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டது…!

Posted by - September 29, 2018

அதிராம்பட்டினம் MSM நகரை சார்ந்த ஜெகுபர் சாதிக் அவர்களுடைய ஆதார் கார்டு,ரேஷன் கார்டு மற்றும் ஸ்மார்ட் ரேசன் கார்டு ஆகியவை பேருந்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது என்பதை காலையில் செய்தியாக அதிரை எக்ஸ்பிரஸில் பதிவிட்டு இருந்தோம். அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியை பார்த்து ஜெகுபர் சாதிக் உறவினர் நமது நிருபருக்கு தொடர்பு கொண்டு நூருல் அமீனிடம் பேசினார்.இதனையடுத்து நேரிடையாக மல்லிப்பட்டினம் சென்று ஆவணங்களை பெற்றுக் கொண்டு அமீனுக்கு நன்றி தெரிவித்தார்.

Read More

அதிரையரின் ஆவணங்கள் மல்லிப்பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது…!

Posted by - September 29, 2018

அதிராம்பட்டினம் MSM நகரை சார்ந்த ஜெகுபர் சாதிக் அவர்களுடைய ஆதார் கார்டு,ரேஷன் கார்டு மற்றும் ஸ்மார்ட் ரேசன் கார்டு ஆகியவை பேருந்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் யாவும் மல்லிப்பட்டினம் ஷாபி இமாம் தெருவை சார்ந்த நூருல் அமீன் அவர்களிடம் தற்சமயம் உள்ளது. தொலைத்தவருக்கு தகவலை தெரியப்படுத்தவும். தொடர்புக்கு :-9677906015    

Read More

போதைக்கு அடிமையாகும் அதிரை இளைஞர்கள்… மீட்டெடுக்க நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம்..![படங்கள்]

Posted by - September 28, 2018

அதிரையில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் உபயோகிக்கும் பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி இளைஞர்களை குறிவைத்து, அவர்களுக்கு போதை பொருட்களை விற்பனை செய்து, அவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் வேளையில் ஒரு சில சமூக விரோத விஷமிகள் திட்டமிட்டு செய்து வருகின்றனர். இதனையடுத்து போதை பழக்கத்திற்கு அடிமையாகி வரும் இளைஞர்கள் குறித்து ஆலோசனை செய்வதற்காக அதிரையில் உள்ள அனைத்து முஹல்லாவாசிகள் ஆலோசனை கூட்டமானது கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரை சம்சுல்

Read More

அதிரையில் பேரூராட்சியின் நிர்வாக சீர்கேட்டைக் கண்டித்து நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டம் !

Posted by - September 28, 2018

அதிரையில் பேரூராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து ஐக்கிய தேசிய மக்கள் கட்சியும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இன்று வெள்ளிக்கிழமை(28.09.2018) மாலை அதிரை பேருந்து நிலையத்தில் இந்த கண்டன பொதுக்கக்கூட்டமானது நடைபெற்றது. இதில் ஐக்கிய தேசிய மக்கள் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கண்டன உரையாற்றினர். இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் கட்சியினர், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Read More

நிலநடுக்கம், சுனாமியிடம் சிக்கி சின்னாபின்னமாகும் இந்தோனேசியா !

Posted by - September 28, 2018

இந்தோனேசியாவை மீண்டும் ஒரு சுனாமி தாக்கியுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு தாக்கிய மிகப் பெரிய ஆசியன் சுனாமி தாக்குதல் ஏற்படுத்திய வடுவை உலக மக்கள் இன்னும் கூட மறக்கவில்லை. இன்று தாக்கிய சுனாமியானது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் உயிரிழப்பும், சேதமும் ஏற்பட்டுள்ளது. பூமியின் மிகவும் அபாயகரமான பகுதிகளில் ஒன்றாக இந்தோனேசியா திகழ்கிறது. அதிக அளவில் நிலநடுக்கங்களையும், சிறிய அளவிலான சுனாமிகளையும் சந்திக்கும் பகுதி இது. பசிபிக் அக்னி வளையப்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)