அதிரை மமகவின் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு விளக்க பொதுக் கூட்டம் நேரலை(Live)!!

Posted by - September 30, 2018

திருச்சியில் அக்டோபர் 7 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மனித நேய மக்கள் கட்சியில் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு நடைபெற்ற உள்ள நிலையில், இந்த மாநாடு ஏன் என்ற தலைப்பில் அதிரை பேரூந்து நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் நேரலை காட்சிகள் இதோ.. நேரலை

Read More

அதிரையில் லயன்ஸ் சங்கம் நடத்திய இலவச மருத்துவ முகாம் ![படங்கள்]

Posted by - September 30, 2018

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் கடந்த 17ஆம் தேதி முதல் தொடர் சேவை திட்டங்களை செய்து வருகிறது. அத்தொடர் சேவையின் நிறைவு நாளான இன்று அதிரை லயன்ஸ் சங்கம், திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து குழந்தையில்லா தம்பதிகளுக்கு இலவச மருத்துவ முகாம் மற்றும் பித்தப்பை கல்லீரல் குடல் இறக்கம் நோய்கள் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் அதிரை சாரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு லயன்ஸ் சங்க தலைவர் பேரா.எம்.ஏ.அப்துல் காதர்

Read More

58 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டிய தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழகம் !

Posted by - September 30, 2018

தஞ்சை சாஸ்திரா பல்கலைகழகம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ள 28 கட்டிடங்களை அக்டோபர் 3-ம் தேதிக்குள் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தஞ்சையை அடுத்த திருமலைசமுத்திரம் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக சாஸ்திரா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. அந்தப் பல்கலைகழகம் அரசின் சிறைத்துறைக்கு சொந்தமான திறந்தவெளி சிறைச்சாலை அமைப்பதற்கான 58.17 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியுள்ளதாக தொடர் புகார்கள் எழுந்தன. இதை அடுத்து அந்த நிலத்தை கையகப்படுத்த அரசு முயற்சிகள்

Read More

‘ரமணா’ பட பாணியில் இறந்த கண்டக்டருக்கு 3 நாட்களாக சிகிச்சை..!!

Posted by - September 30, 2018

நாகை மாவட்டம் திருக்குவளை தாலுகா கீழஈசனூர் பகுதியை சேர்ந்தவர் சேகர்(வயது 55). இவர் அரசு பஸ் கண்டக்டராக நாகை பணிமனையில் வேலை செய்து வந்தார். வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர், நாகை வெளிப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 7-ந் தேதி சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு நாகையில் சிகிச்சை அளித்த டாக்டர் பரிந்துரை செய்துள்ளார். இதையடுத்து

Read More

தஞ்சை அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட விவசாயி பிணமாக மீட்பு..!!

Posted by - September 30, 2018

தஞ்சை அருகே உள்ள ரெட்டிப்பாளையம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் வயது-46 விவசாயி. ராஜமாணிக்கம் தனது மகன் ராஜ்குமாருடன் நேற்றுமுன்தினம் மானோஜிப்பட்டியில் உள்ள வயலில் வேலை பார்த்து விட்டு கல்லணை கால்வாய் ஆற்றங்கரை படித்துறையில் இறங்கி கால் கழுவினார். அப்போது அவர் திடீரென ஆற்றில் தவறி விழுந்து அடித்து செல்லப்பட்டார். இதைக் கண்ட அவரது மகன் ராஜ்குமார் கதறி அழுதபடி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆற்றில் தனது தந்தையை தேடினார். ஆனால் அவரை மீட்க முடியவில்லை. இது குறித்து தஞ்சை

Read More

அதிரை வந்த சமூக நீதி மாணவர் இயக்க பிரச்சார குழுவினர் ![படங்கள்]

Posted by - September 30, 2018

மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு அக்டோபர் 7ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது. அந்த மாநாடு ஏன் என்பது குறித்து சமூக நீதி மாணவர் இயக்க பிரச்சார குழுவினர் சென்னை முதல் கன்னியாகுமரி வரை விளக்கி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக அந்த சமூக நீதி மாணவர் இயக்க பிரச்சார குழுவினர் இன்று அதிரை வருகை தந்தனர். இன்று காலை அதிரை காதிர் முகைதீன் கல்லூரிக்கு வருகை தந்த அவர்கள், மாணவர்களுக்கு துண்டு

Read More

திருச்சி அருகே லாரி-கார் மோதி பயங்கர விபத்து.. 8 பேர் பலி..!

Posted by - September 30, 2018

திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 2 குழந்தைகளும் அடங்கும். மேலும் 4 பேர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னையிலிருந்து திருச்சி நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்த காரில் 12 பேர் பயணம் செய்தனர். சமயபுரம் சுங்கச்சாவடி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. அதனால் தறிகெட்டு சாலையில் இங்குமங்கும் ஓடியது. அப்போது, ஆந்திர மாநிலம்

Read More

அதிரைக்குள் படையெடுத்த ஈசல்படை !

Posted by - September 30, 2018

மழைக்காலங்களில் பெரும்பாலாக காணப்படும் ஈசல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த மழையை அடுத்து ஈசல் உற்பத்தி ஏற்பட்ட நிலையில் இன்றுகாலை முதலே அதிரை நகரில் பெரும்பாலான பகுதிகளில் ஈசல் படையெடுத்தது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் வெகுவாக பாதிக்கப்பட்டது, இருப்பினும் ஈசலின் வருகையினால் அதிரைக்கு மழைக்கான வாய்ப்புள்ளது என்று அதிரை முதியோர்கள் கூறுகின்றனர்.

Read More

தண்ணீரில் தத்தளித்த காந்தி நகர்!!

Posted by - September 30, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 7ஆம் வார்டில் உள்ள காந்தி நகரில் சுமார் 50ற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த (29.09.2018) வெள்ளிக்கிழமையன்று பெய்த கனமழையால் அந்த பகுதியில் உள்ள பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கின்றது. இந்த பாலம் பொதுமக்கள் வேலைக்குச் செல்வதற்கும், குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வதற்கும், வாகனங்கள் செல்லவும் முக்கிய நடைப்பாதையாக இருக்கின்றது. இங்கு தண்ணீர் தேங்கி கிடப்பதால் அப்பாதையில் செல்வதற்கு பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். ஒரு நாள் பெய்த கனமழைக்கே இப்படி ஆகி விட்டது. மழைக்காலங்களில் என்னவாகுமோ

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)