எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க சென்னை புறப்பட்ட அதிரை அதிமுகவினர் ![படங்கள்]

Posted by - September 29, 2018

தமிழக அரசு சார்பில் தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. இதன் நிறைவாக சென்னையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் இவ்விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் இவ்விழாவில் பங்கேற்பதற்காக அதிரை அதிமுகவினர் இன்று பேருந்துகள் மூலம் சென்னை புறப்பட்டனர். அதிரை சுற்றுவட்டார பகுதி அதிமுகவினர் ஒரு பேருந்து , அதிரை அதிமுகவினர்

Read More

அதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா ![படங்கள்]

Posted by - September 29, 2018

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் கடந்த 17ஆம் தேதி முதல் தொடர் சேவை திட்டங்கள் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 11ஆம் நாளான இன்று அதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் காதிர்முகைதீன் கல்லூரி எக்ஸ்னோரா அமைப்பின் மாணவர்களுடன் இணைந்து அதிரை முத்தம்மாள் தெருவில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் கூண்டுவைத்து பராமரிக்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க தலைவர் பேரா.எம்.ஏ.அப்துல்காதர் தலைமை வகித்தார். கிராம நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், தில்லைநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவை லயன் டி.பி.கே.ராஜேந்திரன்

Read More

தஞ்சை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் ஆலோசனை கூட்டம் ![படங்கள்]

Posted by - September 29, 2018

தஞ்சை மாவாட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பாக அனைவருக்கும் வாக்குரிமை சிறப்பு பொதுக்குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கும்பகோணம் அரக்காசியம்மாள் ஜுமுஆ பள்ளியில் இன்று சனிக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரை இக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் மாநில பொதுச்செயலாளர் மெளலானா மெளலவி அல்ஹாஜ் Dr.V.S. அன்வர் பாதுஷாஹ் உலவி ph.D கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார். இக்கூட்டத்தில் தஞ்சை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையைச் சார்ந்த

Read More

மணல் கடத்தலை கண்காணிக்க சென்ற விராலிமலை தாசில்தார் விபத்தில் பலி !

Posted by - September 29, 2018

புதுக்கோட்டை அருகே மணல் கடத்தலை கண்காணிக்க விராலிமலை தாசில்தாரான பார்த்திபன் சென்றுள்ளார். செல்லும் வழியில் வாகனத்தின் டயர் திடீரென வெடித்து, வாகனம் மரத்தில் மோதியுள்ளது. இந்த எதிர்பாராத விபத்தில் படுகாயமடைந்த தாசில்தார், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

Read More

தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தம் மீனவ சங்கங்கள் அதிரடி முடிவு….!

Posted by - September 29, 2018

சென்னை காசிமேட்டில் மீனவ சங்கங்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதரங்கள் தொடர்ந்து கேள்விக்குறியாகி வருவதை குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து ஏற்றப்பட்டு வரும் டீசல் உயர்வை கண்டித்தும்,இலங்கையுடனான பிரச்சனையில் தீர்வு காணாததை கண்டித்தும் மற்றும் மாற்று தொழில் வழிவகை செய்திடக் கோரியும் வருகிற அக்டோபர் 3 முதல் தமிழக விசைப்படகு மீனவர் நலசங்கம், மீனவ சங்கங்கள் மற்றும் மீனவ கிராம பஞ்சாயத்கள் இணைந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு

Read More

தலைக்கணத்தில் ஆடும் சென்னை ராஹத் நிறுவனம் !

Posted by - September 29, 2018

அதிரைக்கு அகலப்பாதை அமைப்பதை அடுத்து நிறுத்தப்பட்ட தொடர்வண்டி சேவையால் செக்கடி டூ மன்னடி வரை பல்வேறு நிறுவன பேருந்துகள் இயக்கப்பட்டன. குறிப்பாக ராஹத் என்ற நிறுவனம் தனது சேவையில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் அப்பேருந்தை அதிரையைர்கள் வெகுவாக பயன்படுத்தி வருகின்றனர். இதில் பார்சல் புக்கிங் பிரதான ஒன்றாக மாற்றப்பட்டு செயல்படுகிறது, இதில் சென்னையில் இருந்து அதிரைக்கு பார்சல் புக்கிங் செய்தால் மதிப்பை விட பன் மடங்கு கட்டணம் வசூலித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்களை

Read More

செய்தி எதிரொலியாக அதிரையரின் ஆவணங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டது…!

Posted by - September 29, 2018

அதிராம்பட்டினம் MSM நகரை சார்ந்த ஜெகுபர் சாதிக் அவர்களுடைய ஆதார் கார்டு,ரேஷன் கார்டு மற்றும் ஸ்மார்ட் ரேசன் கார்டு ஆகியவை பேருந்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது என்பதை காலையில் செய்தியாக அதிரை எக்ஸ்பிரஸில் பதிவிட்டு இருந்தோம். அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியை பார்த்து ஜெகுபர் சாதிக் உறவினர் நமது நிருபருக்கு தொடர்பு கொண்டு நூருல் அமீனிடம் பேசினார்.இதனையடுத்து நேரிடையாக மல்லிப்பட்டினம் சென்று ஆவணங்களை பெற்றுக் கொண்டு அமீனுக்கு நன்றி தெரிவித்தார்.

Read More

அதிரையரின் ஆவணங்கள் மல்லிப்பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது…!

Posted by - September 29, 2018

அதிராம்பட்டினம் MSM நகரை சார்ந்த ஜெகுபர் சாதிக் அவர்களுடைய ஆதார் கார்டு,ரேஷன் கார்டு மற்றும் ஸ்மார்ட் ரேசன் கார்டு ஆகியவை பேருந்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் யாவும் மல்லிப்பட்டினம் ஷாபி இமாம் தெருவை சார்ந்த நூருல் அமீன் அவர்களிடம் தற்சமயம் உள்ளது. தொலைத்தவருக்கு தகவலை தெரியப்படுத்தவும். தொடர்புக்கு :-9677906015    

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)