முதலில் விவசாயி பிரச்சனையை தீருங்கள்.. புல்லட் ரயில் திட்டத்திற்கு நிதி வழங்குவதை நிறுத்திய ஜப்பான் !

Posted by - September 25, 2018

இந்தியாவில் 2023க்குள் புல்லட் ரயிலை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த ரயில் மஹாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கும், குஜராத்தின் அஹமதாபாத்துக்கும் இடையில் இயக்கப்படும். இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் இதுவாகும். 1.60 லட்சம் கோடி இதற்கு செலவு ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் 1.10லட்சம் கோடி ரூபாயை ஜப்பான் அரசு கடனாக கொடுக்கிறது. ஜப்பான் அரசு மூலம் ”ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம்” வழங்கும் பணத்தில் ஜப்பான் ஊழியர்கள் இந்த புல்லட் ரயில் பாதையை

Read More

அதிரையில் நாளை பள்ளி,கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் கண்தான விழிப்புணர்வு பேரணி !

Posted by - September 25, 2018

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் இம்மாதம் 17ஆம் தேதி முதல் தொடர் சேவைத் திட்டங்கள் செய்து வருகிறது. அதன் 8வது நாள் திட்டமாக அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம், காதிர் முகைதீன் கல்லூரி, காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆக்ஸ்போர்ட் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்குபெறும் பார்வைக்கோர் பயணம் கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது. நாளை 26.09.2018 புதன்கிழமை பகல் 2 மணியளவில் அதிரை காதிர் முகைதீன் கல்லூரி முதல் பேருந்து நிலையம் வரை இப்பேரணி நடைபெற உள்ளது.

Read More

பட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழக மீனவர் நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் ![படங்கள்]

Posted by - September 25, 2018

தமிழக கடலோர விசைப்படகு மீனவர் நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் பட்டுக்கோட்டை மினிப்பிரியா திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டம் இச்சங்கத்தின் மாநில தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். வேணுகோபால், மாநில செயலாளர் ஆ. தாஜுதீன், இராமேஸ்வரம் என். தேவதாஸ், நாகப்பட்டினம் சிட்டிலிங்கம், புதுகோட்டை செல்லத்துரை, கன்னியாகுமரி அருளானந்தம், கடலூர் சுப்பராயன், தஞ்சாவூர் வடுகநாதன், மண்டபம் பாலன், காரைக்கால் சிவசுப்பிரமணியன், விழுப்புரம் வேலு, சோலியக்குடி ராசேந்திரன், தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு சங்கம் நாகராஜ் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

Read More

இலவச கால்நடை பொது மருத்துவ முகாம்..!!

Posted by - September 25, 2018

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம், பட்டுக்கோட்டை கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ராஜமாடம் அரசு மேல்நிலைப்பள்ளி NSS அமைப்பு இணைந்து நடத்தும் இலவச கால்நடை பொது மருத்துவ முகாம் எதிர்வரும் (27/09/2018) வியாழன் அன்று நடைபெறவுள்ளது. இம்முகமில் கீழ்கண்ட சிகிச்சைகள் இலவசமாக கால்நடைகளுக்கு அளிக்கவுள்ளனர். ◆குடற்புழு நீக்கம், ◆ஆண்மை நீக்கம், ◆மலடுநீக்க சிகிச்சை, ◆செயற்கை முறை கருவூட்டல் மற்றும் அனைத்துவிதமான விதமான நோய்களுக்கும் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கவுள்ளனர். நேரம் : காலை 09:00 மணி முதல் நண்பகல் 12:00

Read More

மணல் கொள்ளையில் ஈடுபடும் வாகனம் பறிமுதல் செய்யப்படும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு ..!!

Posted by - September 25, 2018

மணல் திருட்டில் ஈடுபடும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மணல் திருட்டு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதனால் இயற்கை வளங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி பொதுநல வழக்கு ஒன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று(24/09/2018) விசாரணைக்கு வந்தது. அப்பொழுது வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம், மணல் திருட்டில் ஈடுபடும் போது பிடிபடும் வாகனங்களை பறிமுதல் செய்யவேண்டும். மணல்

Read More

பட்டுக்கோட்டையில் நடைபெற்று வரும் மாநில அளவிலான கூடைப்பந்து தொடர்போட்டி !

Posted by - September 25, 2018

பட்டுக்கோட்டை பிரீமியர் கூடைப்பந்து கழகம் சார்பில் கல்லூரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான கூடைப்பந்து தொடர் போட்டி பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. முன்னதாக இத்தொடர்போட்டியின் துவக்கவிழா சிறப்பு அழைப்பாளர்களாக பட்டுக்கோட்டை நகர காவல்துறை ஆய்வாளர் அன்பழகன் , முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஜவகர்பாபு , மயில்வாகணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நேற்று மாலை முதல் தொடங்கி நடைபெற்று வரும் இத்தொடர்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல அணிகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றன.

Read More

அதிரை லயன்ஸ் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 இணைந்து நடத்திய விலையில்லா குப்பைக்கூடைகள் வழங்கும் முகாம் !

Posted by - September 25, 2018

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் தொடர் சேவை திட்டங்கள் இந்த மாதம் 17ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் 7வது நிகழ்ச்சியாக அதிராம்பட்டினம் லயன்ஸ் கிளப் மற்றும் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ஆகியவை இணைந்து நடத்தும் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வுக்காக விலையில்லா குப்பைக்கூடைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (25.09.2018) காலை 9.00 மணிக்கு பேருந்து நிலையம் எதிர்புறம் ஜக்கரியா காம்ப்ளக்ஸ் வணிக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க தலைவர்

Read More

அதிரைக்கு வருகை தந்த மமக தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் !

Posted by - September 25, 2018

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இன்று காலை அதிரைக்கு வருகை தந்தார். அதிரை வந்த அவர் , மமக நடத்தும் அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு தொடர்பாக இன்று காலை 11 மணியளவில் அதிரை நகர திமுகழகச் செயலாளர் இராம. குணசேகரனை சந்தித்தார். இதில் திமுக மற்றும் மமகவைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Read More

பன்னிரண்டாம் வகுப்பு மாணவ – மாணவிகளுக்கு ஓர் அறிய வாய்ப்பு…!

Posted by - September 25, 2018

சென்னை தாம்பரம் படப்பையில் இயங்கிவரும் தானிஷ் அஹமத் இன்ஜினியரிங் காலேஜ் வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி பட்டுக்கோட்டை மாதா கோவில் சாலையில் உள்ள மங்கள மாதா திருமண மண்டபத்தில் காலை 10 மணி அளவில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலக்கூடிய மாணவ மாணவிகளுக்கு கணித வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் புகழ்பெற்ற கணித வல்லுனர் முனைவர் ஆசிக் அலி அவர்கள் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு கணித பாட வழிகாட்டுதலை வழங்க உள்ளார்கள். ஆர்வமுள்ள பன்னிரெண்டாம் வகுப்பு

Read More

பட்டுக்கோட்டையில் சிறப்பாய் நடைபெற்ற கலைஞரின் புகழுக்கு வணக்கம்….!

Posted by - September 25, 2018

தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை நகர திமுக சார்பில் கலைஞரின் புகழுக்கு வணக்கம் கூட்டம் நேற்று (24.9.2018) மாலை 4 மணியளவில் KKT சுமங்கலி மஹாலில் நடைபெற்றது. தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.சுப.வீரபாண்டியன்,புலவர் சண்முக வடிவேலு மற்றும் புதுக்கோட்டை விஜயா ஆகியோர் கலந்துகொண்டு கலைஞரின புகழை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினர்.பட்டுக்கோட்டை நகர பொறுப்பாளர் எஸ்.ஆர்.என் செந்தில் குமார் நன்றியுரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் அதிரை,புதுப்பட்டிணம் பகுதி திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.      

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)