பேராவூரணி உள்ளிட்ட பகுதியில் இன்று மின் தடை!!

Posted by - September 24, 2018

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பேராவூரணி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய இடங்களில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (25-09-2018) செவ்வாய்க்கிழமை பேராவூரணி, சேதுபாவாசத்திரம், குருவிக்கரம்பை, ஒட்டங்காடு, கள்ளம்பட்டி, திருச்சிற்றம்பலம், பெருமகளூர், பூக்கொல்லை, காலகம் அதனை சுற்றியுள்ள ஊர்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Read More

பல ஆண்டுகளுக்கு பிறகு தார்சாலை அமைக்கும் பணி துவக்கம்..!!

Posted by - September 24, 2018

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் முக்கிய கடைவீதிகளில் தார் சாலை அமைக்கும் பணி தீவிரம். அதிரை மக்களின் நீண்டநாள் கோரிக்கையும்,அடிப்படை கோரிக்கையும் என்பதும் தரமான சாலை என்பதும் ஒன்றாகும்.அதிரை பேரூராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்தொடர்ச்சியாக காலேஜ் முக்கத்திலிருந்து ஜாவியா,நடுத்தெரு வழியாக சேர்மன்வாடி வரை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.கடந்த சில நாட்களுக்கு முன் பழைய தார்சாலை உடைக்கப்பட்டு அப்படியே கிடந்தது, இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளானர்கள்.இப்போது அமைக்கப்படும் சாலையால் அப்பகுதி

Read More

அதிரையில் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் …!

Posted by - September 24, 2018

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.. அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து அதிரை நகர மார்க்சிஸ்ட் கட்சியினர் நேற்று(23.9.2018) மாலை 6 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு,ஆட்சியாளர்களின் அடக்குமுறைகள்,போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை மக்கள் முன் எடுத்தரைத்தனர். இக்கூட்டத்தில் அதிரை நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.  

Read More

புதுப்பட்டிணம் ஊராட்சியில் சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீர் அமைக்கும் பணி தீவிரம்…!

Posted by - September 24, 2018

தஞ்சை மாவட்டம் புதுப்பட்டிணம் ஊராட்சியில் சேதம் அடைந்த குடிநீர் குழாய்கள் மற்றும் வெளிவயல் கிராமத்தின் முருகன் கோவில் அருகில் சில சமுக விரோதிகளால் அடிக்கடி குடிநீர் குழாய்கள் சேதமாக்கப்படுகிறது. ஆகவே அந்த இடத்தில் பிளாஸ்டிக் குழாய்களுக்கு பதிலாக இரும்பு குழாய்கள் அமைக்கும் பணி வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவின் படி நேற்று போர்கால அடிப்படையில் துவங்கி நடைபெற்று வருகிறது. சில சமுகவிரோதிகளின் இந்த செயல்களால் அப்பகுதிக்கு சீரான குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. வட்டார வளர்ச்சி ஆய்வாளரின்

Read More

மரண அறிவிப்பு : நடுத்தெருவைச் சேர்ந்த ஆமினா அம்மாள் அவர்கள் !

Posted by - September 24, 2018

மரண அறிவிப்பு : நடுத்தெரு ஆம்லக்கா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் நெ.அ. முஹம்மது இபுராஹீம் அவர்களின் மனைவியும் , மர்ஹூம் எ. செய்யது முஹம்மது புஹாரி அவர்களின் சகோதரியும் , மர்ஹூம் மு.இ. ஹபீப் ரஹ்மத்துல்லாஹ் , மு.இ. ஹிதாயத்துல்லாஹ் , மு.இ. சேக் மதினா ஆகியோரின் தாயாரும் , எம். செய்யது அபூசாலிகு , மர்ஹூம் சி.ந. அப்துல் கரீம் , மர்ஹூம் ந.அ. முகைதீன் அப்துல் காதர் , நெ.அ. தமீம் அன்சாரி ஆகியோரின்

Read More

அதிரை புஹாரி ஷரீஃப் நிறைவு ஆடியோ (Live) முகநூல் நேரலை!!

Posted by - September 24, 2018

அதிரையில் ஆகஸ்ட் (12-08-2018)முதல் தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற்று வந்த புஹாரி ஷரீஃப் இன்றுடன் நிறைவடைகிறது. அதன் ஆடியோ நேரலை ஒளிபரப்பு இதோ.. (Facebook) முகநூல் பக்கத்தில் நேரலையை காண https://m.facebook.com/story.php?story_fbid=299851780816844&id=294070597282254

Read More

அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பின் ஆலோசனை கூட்டம்!!

Posted by - September 24, 2018

அதிரையில் உள்ள பெரும்பாலான பள்ளிக் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என பலரும் நாளுக்கு நாள் போதை பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர். மாணவர்கள் இந்த போதைப் பொருளை உயயோக்கிப்பதை தடுக்கும் முயற்ச்சியாக இன்று ஷம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பு சார்பாக அலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு, சசங்கத்தலைவர் ஹாஜி MSM.அபூபக்கர் தலைமை வகித்தார். அதிரை அனைத்து மஹல்லா நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அண்மை காலமாக அதிரை இளைஞர்கள் மற்றும் பள்ளிக் கல்லூரி மாணவர்களிடையே அதிகரித்து வரும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)