முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Posted by - September 14, 2018

  திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 7ம் தேதி மரணம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து, தலைவராக மு.க.ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் பதவி ஏற்றனர். இந்நிலையில் துரைமுருகன் வகித்து வந்த முதன்மை செயலாளர் பதவி காலியாக இருந்தது. இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டி.ஆர்.பாலுவை முதன்மை செயலாளராக அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.  

Read More

நாளை மின்தடை !!

Posted by - September 14, 2018

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் உதவி செயற் பொறியாளர் லெட்சுமணன் இன்று செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் , பட்டுக்கோட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெரும் பட்டுக்கோட்டை , பண்ணவயல் , சூரப்பள்ளம் , சூரங்காடு , வீரக்குறிச்சி , குறிச்சி , பாளமுத்தி ஆகிய பகுதிகளுக்கு நாளை சனிக்கிழமை (15-09-2018) காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி

Read More

அதிரை அருகே அடையாளம் தெரியாத நபர் மரணம்..!!

Posted by - September 14, 2018

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பெரியதெரு அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் சாலையோரத்தில் இருந்தது. நேற்று (13/09/2018) வியாழக்கிழமை காலை அடையாளம் தெரியாத நபர் பட்டுக்கோட்டை பெரிய தெரு அருகே இறந்து விட்டார். இவரது உடலானது காலை முதல் மாலை 03.30 மணி வரை இறந்த இடத்திலேயே இருந்துள்ளது. அதன் பிறகு மாலை 3.45 மணியளவில் தகவலறிந்து கலாம் இயக்கம் நிர்வாகிகள், பட்டுக்கோட்டை காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். பிறகு அவரின் உடலை மீட்டனர்

Read More

அறுந்து விழும் நிலையில் மின் கம்பம் : அயர்ந்து தூங்கும் அதிரை மின் வாரியம்!!

Posted by - September 14, 2018

அதிரையில் உள்ள மின் வாரியத்தின் அலட்சியம் பற்றி அளவுக்கு அதிகமான செய்திகள் ஊடகங்களில் உலாவுவதை அதிரையர்கள் அனைவரும் அறிவர். இப்படியிருக்கும் சமயத்தில் அதிரை புதுமனைத்தெரு, அம்பேத்கர் நகர் 21வது வார்டு பகுதியில் உள்ள மின் கம்பம் மிகவும் பேராபத்தாக முழு மின் கம்பமே அறுந்து விழும் நிலையில் உள்ளது. இந்த மின் கம்பம் அருகே ஏராளமான வீடுகள் இருக்கின்றன. அது மட்டுமின்றி மாலை நேரத்தில் சிறுவர் சிறுமியர் இவ்விடத்தில் தான் விளையாடுகின்றனர். இப்படியிருக்கும் நிலையில் திடீரென மின்

Read More

உங்களுக்குத் தெரியுமா..? கொத்தமல்லி ஜூஸ் செய்து குடித்தால் என்ன பலன்கள்?

Posted by - September 14, 2018

கொத்தமல்லியில் ஆன்டி மைக்ரோபையல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் உள்ளது. இரத்த சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. இதனை நீங்கள் ஜூஸ் செய்தும் பருகலாம். கொத்தமல்லி ஜூஸ்: கொத்தமல்லி இலையை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நீர் ஊற்றி கழுவி பின்னர் அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்க வைத்து ஆறிய பின்னர் எலுமிச்சை சாறு கலந்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான் ஜூஸ் தயார். பலன்கள்: கொத்தமல்லி ஜூஸ் சரும பிரச்சனைகளை போக்க

Read More

நெல்லை செங்கோட்டையில் விநாயகனின் பெயரால் விபரீதம்!

Posted by - September 14, 2018

நெல்லை செங்கோட்டை மேலூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பல்வேறு இடங்களின் களிமண்னிலான விநாயகர் சிலை வைக்கப்பட்டது. இந்நிலையில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்க கூடிய பகுதியான மேலூர் பகுதியில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டது. முன்னதாக கலவர நோக்குடன் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பயங்கர ஆயுதங்களுடன் ஊர்வலமாக இந்து முன்னணி குண்டர்கள் சென்றுள்ளனர். அப்போது இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்குள் பூஜை ஊர்வலம் செல்ல அனுமதிக்குமாறு காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் இந்து முன்னனியினர் ஈடுபட்டதாக தெரிகிறது. காவல் துறை

Read More

திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்றதை இனிப்பு வழங்கி கொண்டாடிய புதுப்பட்டினம் திமுகவினர்!!

Posted by - September 14, 2018

திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றதை கொண்டாடும் வகையில் நேற்று தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றிய புதுப்பட்டினம் கிளையின் சார்பில் விழா நடைபெற்றது. புதுப்பட்டினத்தில் நடைபெற்ற இவ்விழாவில் திமு கழகத்தின் மூத்த முன்னோடிகளான ஜனாப் HMS. சாகுல் ஹமீது மற்றும் ஜனாப். முகமது ஹனிபா ஆகியோர் கழக உறுப்பினர்கள் முன்னிலையில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை அமீரக திமுகவின் இணைச்செயலாளர் மு.சாகுல் ஹமீது மற்றும் புதுப்பட்டினம் கிளையின் திமுக நிர்வாகிகள் ம. காதர்சே க்காதி,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)