ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 9 ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர்போட்டி..!

Posted by - August 31, 2018

ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 9 ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர்போட்டி இன்று(31.08.2018) வெள்ளிக்கிழமை இரவு காட்டு பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டி இன்று இரவு முதல் தொடங்கி நாளை இரவு வரை நடைபெறும். போட்டியை என்.எ அப்துல் காதர் அவர்கள் மற்றும் பேரா.செய்யது அகமது கபிர், அனைத்து முஹல்லா நிர்வாகிகள், அதிரையில் உள்ள அனைத்து கிளப் WSC ESC AFFA, அதிரை கிராமவாசிகள், ஜலில்,ராவுத்தர்,தாஜீதின்,மீன்கடை தாஜீதின் , ஹமிது , மான் சேக்

Read More

அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி மல்லிப்பட்டினத்தில் குடிநீர் குழாய்கள் சீரமைக்கும் பணி தீவிரம்….!

Posted by - August 31, 2018

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினத்தில் குடிநீர் குழாய்கள் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டிருந்ததாக கடந்த இரு தினங்களுக்கு முன் அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு இருந்தது. சுற்றுச்சூழல் ஆர்வலர் விவேகானந்தன் அவர்களும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார், அதனடிப்படையில் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டு வருகிறது. அதிரை எக்ஸ்பிரஸ் பதிந்த செய்தி. மல்லிப்பட்டினத்தில் நாலாபுறமும் உடைந்த குடிநீர் குழாய்கள் மெத்தனம் காட்டும் ஊராட்சி அலுவலர்….!

Read More

மரண அறிவிப்பு (இப்ராஹிம் மரைக்காயர் 104)

Posted by - August 31, 2018

கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் மொஹிதீன் வாப்பு(மெய்வாப்பு) அவர்களின் மகனும் மர்ஹும் முகம்மது காசிம் மரைக்காயர்,மர்ஹும். சின்னத்தம்பி மரைக்காயர் அவர்களின் சகோதரரும்,முஹம்மது ஹனீஃப்,பஷீர் அஹமது,அஹமது முகைதீன் ஆகியோரின் மாமனாரும் முஹம்மது யூசுப்,அகமது அமீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய அனீஜா ஸ்டோர் இப்ராஹிம் மரைக்காயர் அவர்கள் CMP லைன் இல்லத்தில் காலமாகிவிட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

Read More

அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி!!

Posted by - August 31, 2018

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிரையில் உள்ள ஏரிபுறக்கரை ஊராட்சியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை மக்களிடம் கேட்டறிந்து செய்தியாக பதிவிட்டிருந்தோம். இதனையடுத்து அங்கு நிலவி வந்த குடிநீர் பற்றாக்குறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது, பொது மக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தாங்கள் வசிக்கும் பகுதியின் அவலநிலையை செய்தியாக வெளியிட்டு அதற்கு தீர்வு தேடித்தந்த ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ செய்தி குழுமத்திற்கு அப்பகுதி மக்கள் இன் முகத்துடன் நன்றியை தெரிவித்தனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)