அதிரை அருகே படியில் பயணம் செய்தவர் கீழே விழுந்து விபத்து !!

Posted by - August 26, 2018

பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் அப்துல் ஜப்பார் என்பவர் படியில் நின்றவாரு பயணம் செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கீழே விழுந்ததாக தெரிகிறது. இதில் அவரது நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவலின் பேரில் விரைந்து சென்ற CBD அஃப்ரீத் குழுவினர் காயம் அடைந்தவரை மீட்டு தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ள்ளார். அவருக்கு அங்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Read More

கலாம் நண்பர்கள் கேரளாவிற்கு நேரடி வெள்ள நிவாரண உதவி ….!

Posted by - August 26, 2018

கலாம் நண்பர்கள் இயக்கத்தினர் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் உதவி. வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவிகளை பல்வேறு தரப்பினர் செய்து வருகின்றனர். கலாம் நண்பர்கள் இயக்கத்தினர் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வசூல் செய்தனர்.அதனடிப்படையில் வாங்கிய பொருட்களைமாநில ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் மற்றும் தஞ்சை மாவட்ட தலைவர் மதன் ஆகியோர் நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வினியோகம் செய்தனர்.          

Read More

மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்றத்தினர் ஈசிஆர் சாலையில் பேரிகாட் வைத்தனர்…..!

Posted by - August 26, 2018

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் ஈ.சி.ஆர் சாலையில் பேரிகாட் வைக்கப்பட்டது. மல்லிப்பட்டினம் அருகே அதிகமான வாகன விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.மேலும் ஈசிஆர் சாலையில் வருகின்ற வாகனங்கள் அதிவேகமாக செல்வதாலும் விபத்துகள் தொடர்ந்த வண்ணமே இருந்தது. இதனையடுத்து மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்றம் சார்பாக மல்லிப்பட்டினம் ஈ.சி.ஆர் சாலையில் புதுமனைத்தெரு நுழைவு வாயில் அருகே வாகன வேக தடுப்புகளை வைத்தனர். இந்நிகழ்வில் சமுதாய நலமன்றத்தின் நிறுவனர் கனடா ரஃபி,மன்ற நிர்வாகிகள் ஹசன் மைதீன்,பிச்சை,உமர்,சைபுல்லா,ரஹ்மத்தில்லா ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்கனவே மல்லிப்பட்டினம் மெயின்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)