சொந்த செலவில் நீர்நிலைகளை தூர்வாரும் அதிரை கடற்கரைத் தெருவாசிகள் !

Posted by - August 18, 2018

அதிரை கடற்கரைத் தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பனி மன்றத்தினர் கடற்கரைத் தெருவில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்ட கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாத்தின் புதிய நிர்வாகம் தெரு சார்ந்த அடிப்படை தேவைகளை அதிரடியாக செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடற்கரைத் தெரு நீர்நிலைகளில் வளர்ந்து நிற்கும் காட்டு கருவேல மரங்களை அழிக்கும் பொருட்டு முடிவு செய்து , அதற்காக தெருவாசிகளிடமே நிதிதிரட்டி தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றது.

Read More

காவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்… தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை !

Posted by - August 18, 2018

காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அங்குள்ள கபிணி , கே.ஆர்.எஸ் உள்ளிட்ட அணைகள் நிரம்பின. இதையடுத்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கர்நாடகாவில் இருந்து அதிகப்படியான உபரி நீர் திறந்துவிடப்பட்டதால் மேட்டூர் அணை நிரம்பி , மேட்டூர் அணைக்கு வரும் நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின்

Read More

தண்ணீரின்றி கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : போராட அழைப்பு!!

Posted by - August 18, 2018

தஞ்சை மாவட்டம், கடைமடை பகுதியான அதிராம்பட்டினத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் ஒரு மாதகாலமாகியும் வராததால் பஸ் மறியல் போராட்டம் நடத்தவுள்ளனர். மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்டு ஒரு மாதமாகியும் பசுமை பகுதியான தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதிக்கு தண்ணீர் வராததை கண்டித்து எதிர்வரும் (23/08/2018) வியாழன் அன்று காலை 10.00 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள அதிரை பேரூராட்சி வளாகம் முன்பு பஸ் மறியல் போராட்டம் நடத்தவுள்ளனர். பஸ் மறியல் போராட்டத்தில் சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள்,

Read More

யு.ஏ.இ சார்பாக கேரளாவிற்கு உதவ தேசிய அவசர குழு நியமனம்….!

Posted by - August 18, 2018

கேரள மாநிலம் வரலாறு காணாத வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவுக்கு உதவ ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனிக்குழு ஒன்றை அமைக்க அதிபர் ஷேக் கலீபா பின் சயீத் அல் நக்யான் உத்தரவிட்டுள்ளார். தேசிய அவசர குழுவை நியமித்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவுமாறு தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தலைவர் முகமது பின் ரஷீத் அல் மகதூம் டுவிட்டரில் கூறும்போது, “ஐக்கிய அரபு எமிரேட்சின் வெற்றிக்கு கேரள மக்கள் எப்போதுமே முக்கிய பங்கு வகித்து

Read More

இலவச டாக்டைம்.. இலவச இண்டர்நெட்.. : செல்போன் நிறுவனங்கள் அதிரடி!!

Posted by - August 18, 2018

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை மிகத் தீவிரமடைந்து வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்து ஒட்டு மொத்த மாநிலமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால், வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் சிக்கி இதுவரை 364 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கன்றன. அது மட்டுனின்றி கேரளாவில் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு, உடை அடிப்படை உதவிகளை ஓவ்வொரு மாநிலமும் அரசின் மூலமாக செய்து வருகிறது. இந்நிலையில், கேரளாவில் ஏர்டெல், வோடஃபோன், ஐடியா, ஜியோ,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)