பிள்ளையை பெற்று கழிவு கால்வாயில் வீசிய கொடூர தாய் : ஓர் அதிர்ச்சி சம்பவம்!! (கானொளி)

Posted by - August 16, 2018

இன்றைய சூழலில் பல தம்பதிகள் குழந்தை இல்லாமல் மிகவும் வருத்தமுற்று மன உளைச்சளுக்கு ஆளாகி வருவதை நாமும் கண்கூடாக தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்படியிருக்கும் நிலையில் நேற்று (15-08-2018) சுதந்திர தினத்தன்று சென்னை வளசரவாக்கத்தில் ஓர் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது. ஆம்..! தான் பெற்ற பிள்ளையையே சாக்கடை கழிவு கால்வாயில் தாய் வீசிய சம்பவம். தன் பெயர் சொல்வதற்கென்று ஒரு குழந்தை இல்லையே என காலம் முழுதும் கலங்கிய கண்களுடன் ஏங்குவோர் பலர் இச் சமூகத்தில் நமக்கு

Read More

வாஜ்பாய் மறைவு … தமிழகம் உட்பட பல மாநிலங்களில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு !

Posted by - August 16, 2018

உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று மாலை 5.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் 7 நாட்கள் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அரசின் நிகழ்ச்சிகள் 7 நாட்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது. வாஜ்பாயின் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழக அரசும் அறித்துள்ளது. நாளை வெள்ளிக்கிழமை (16-08-2018) தமிழகத்தில் அரசு விடுமுறை என்றும்

Read More

ஈரோடு, கோவை பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது., பொதுமக்கள் அவதி.!

Posted by - August 16, 2018

காவிரியாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஈரோடு, மேட்டுப் பாளையம் மற்றும் கோவை புறநகர் பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டனர். அவர்களை அதிகாரிகள் உடடினயாக பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது இதன் காரணமாக ஈரோடு, கோவை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளங்கள் அனைத்தும்

Read More

>>FLASH_NEWS<< முன்னாள் பிரதமர் வாஜ்பாய்(93) காலமானார் !

Posted by - August 16, 2018

முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாய் காலமானார். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் கிருஷ்ண பிகாரி வாஜ்பாய் – கிருஷ்ணா தேவி தம்பதியினருக்கு டிசம்பர் 25, 1924 அன்று பிறந்தார். அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்ற வாஜ்பாய் 1939-ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் கொள்கையில் ஈர்க்கப்பட்டு அதில் தன்னை இணைத்துக் கொண்டார். 1996 ஆம் ஆண்டு மிகக் குறுகிய காலம் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார். பின்னர் மார்ச் 19-ஆம் தேதி 1998-ஆம் ஆண்டு இந்தியாவின்

Read More

வாஜ்பாய் தொடர்ந்து கவலைக்கிடம் – ராஜ்நாத் சிங்!

Posted by - August 16, 2018

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு சிறுநீரக கோளாறு மற்றும் உடல் நலிவு காரணமாக கடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், உடல்நிலை குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவரது வளர்ப்பு மகள் நமீதாவிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், “வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருக்கிறது” என்றார்.

Read More

கர்நாடகாவில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி!

Posted by - August 16, 2018

தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால், கர்நாடகாவில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதனால், அம்மாநிலத்தின் அணைகள் நிரம்பி வழிகிறது. இந்த கனமழை காரணமாக கர்நாடகாவின் மடிகேரி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More

இனி வாடகைக்கும் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்!

Posted by - August 16, 2018

தொழில்நுட்பம் வீட்டு உபயோகப் பொருட்களை வாடகைக்கு விடும் தொழிலில் ஈடுபட்டுள்ள ரென்டோ மோஜோ நிறுவனம், தன் இணையதளத்தின் மூலம் தற்போது ஸ்மார்ட்போன்களையும் வாடகைக்கு விடுகிறது. குறைந்தபட்சமாக மாதத்திற்கு ரூ.399 முதல் வாடகை செலுத்தி ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பிட்ட டெபாஸிட் தொகையைக் கட்டி இவ்வாறு வாடகைக்கு ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Read More

நிகோபர் தீவில் நிலநடுக்கம்!

Posted by - August 16, 2018

இந்தியா நிகோபர் தீவில் மதியம் 1.43 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. நிகோபர் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Read More

அதிரையில் உடற்தூய்மை பிரச்சாரத்தை முன்னெடுத்த அதிரை ரோட்டரி சங்கம்….!

Posted by - August 16, 2018

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு சுகாதரம் மற்றும் உடல்தூய்மை குறித்து பயிற்சி மற்றும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. மேலும் கை கழுவுவதற்கு தேவையான சோப்,கிருமி நாசினி(டெட்டால்),கைத்துடைக்க டவல் போன்றவைகள் ரோட்டரி சங்கத்தினரால் பள்ளிக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிரை ரோட்டரிசங்கத்தின் தலைவர். Rtn.MK.முகமது சம்சுதீன் தலைமைதாங்கினார். சங்கத்தின் செயளாலர் Rtn.இசட்.அகமது மன்சூர் முன்னிலை வகித்தார்.ரோட்டரி சங்கத்தின் முன்னால் செயளர்

Read More

அதிரையில் புனித பாத்திமா அன்னை ஆலய திருவிழா!!

Posted by - August 16, 2018

அதிரை மெயின் ரோடு அருகே அமைந்திருக்கும் பாத்திமா அன்னை கிறிஸ்தவ தேவாலயத்தின் 47 ம் ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் (14-08-2018) அன்று செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் நடைபெற்றது. அதன் துவக்கமாக நேற்று (15-08-2018) புதன்கிழமை தேவாலயத்தில் திருப்பலி நடைபெற்றது. இவ்விழாவில் பட்டுக்கோட்டை பங்கு தந்தை மற்றும் உதவி பங்குதந்தை கலந்துகொண்டார்கள். இதன் பின்னர் பாத்திமா அன்னை கிறித்தவ தேவாலயத்தில் இருந்து தேர் பவனி பழஞ்செட்டி தெரு, ஈசிஆர், பேரூந்து நிலையம் வழியாக மீண்டும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)