தொடர் மழை, வெள்ளம்… தமிழகத்தில் இரண்டு மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை !

Posted by - August 15, 2018

தற்போது தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று வருகிறது. வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஏற்பட்டுள்ளது. இது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடித்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களிலும் , மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரியில் நேற்று இரவில் இருந்து மழை பெய்து வருகிறது. அனைத்து அணைகளும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் தீவுகள் போல

Read More

இந்தியர்களை அடிமைபடுத்தும் பொருளாதாரம் ! (சிறப்பு கட்டுரை)

Posted by - August 15, 2018

  இந்திய தேச விடுதலையின் 72ஆம் ஆண்டை நாடெங்கிலும் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகிறோம். ஆனால் பொருளாதாரத்தை ஈட்ட வேண்டும், அதன் முலம் நம் நாட்டிற்கு அந்நிய செலவானியை அள்ளித்தர வேண்டும் என்ற நோக்கோடு புலம்பெயர்ந்து ஏனைய நாடுகளின் பணியாற்றும் இந்தியர்களின் நிலை மிகவும் கவலைக்குறியது. மலேசிய உணவகம் ஒன்றில் பனியாற்றும் இந்திய இளைஞன் இன்று அந்நாட்டு கொடியினை ஏந்தி பிடிக்கிறான் இன்று ! அரபு தேசத்தில் வாழும் இந்தியன் ஒரு நம்மை அடிமைபடுத்தி வைத்திருந்த ஆங்கிலேயரின்

Read More

அதிரையில் நாளை மின் தடை!!

Posted by - August 15, 2018

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் மாத பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் மதுக்கூர் மற்றும் அதப் சுற்று வட்டார பகுதியான பெரியக்கோட்டை, தாமரங்கோட்டை, முத்துப்பேட்டை, துவரங்குறிச்சி, அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள ஒரு சில பகுதிகளுக்கு (16-08-2018) நாளை வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் மின் வினியோகம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நிறுத்தப்படும் என்று மதுக்கூர் மின் வாரியம் அறிவித்துள்ளது. இதனால் அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் தங்களுடைய

Read More

அதிரை ரோட்டரி சங்கத்தின் சுதந்திர தினவிழா !

Posted by - August 15, 2018

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக நமது நாட்டின் 72-வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிரை ரோட்டரி சங்க அலுவலத்தில் ரோட்டரி மாவட்ட ஆளுனர் Rtn.திரு.K. திருநாவுக்கரசு தேசிய கொடியை ஏற்றி சிறப்புரை ஆற்றினார். அதிரை ரோட்டரி சங்க தலைவர் Rtn.M.K. முகமது சம்சுதீன் மற்றும் செயலாளர் Rtn.,Z. அகமது மன்சூர், சங்க பொருளாளர். Rtn.S. சாகுல் ஹமீது ஆகியோர் தலைமை ஏற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சுதந்திரதியாகிகள் பற்றி உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக ஆதரவற்ற

Read More

இந்திய சுதந்திரமும் இன்றைய ஆட்சியும்..

Posted by - August 15, 2018

  இந்தியா வெள்ளைக்காரன் வச்ச பேரு. கிழக்கிந்திய கம்பெனிகள் நம்முடைய தேசத்தை அதனுடைய வளங்களை நம்மக்களின் உரிமைகளை அடிமையாக வைத்திருந்து ஆட்சி புரிந்தன… அவன் ஆட்சியில் இருக்கும்பொழுது அவனுக்கு என்னமோ கப்பம் கட்டி வந்தோம். அவன் நமக்காக பல பாலங்கள் போக்குவரத்து சாலைகள் இரயில் நிலையங்கள். இன்னும் பல அதியசய தக்க கட்டிடங்கள் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தினான். இதையெல்லாம் நாம் பொருட்படுத்தாமல் நாம் அவனுக்கு அடிமையாக இருந்ததை உணர்ந்தோம். காரணம் நம் வளங்களை சுரண்டினான் நம்மை அடிமையாகவே

Read More

அதிரை லயன்ஸ் சங்கத்தின் சுதந்திர தினவிழா..!

Posted by - August 15, 2018

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பாக வள்ளிக்கொல்லைக்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இன்று சுதந்திர தின கொடியேற்றப்பட்டது. இதில் தலைமை ஆசிரியை வரவேற்புரை ஆற்றினார். லயன்ஸ் சங்க தலைவர் பேரா. முகம்மது அப்துல்’ காதர் அவர்கள் கொடியேற்றினார் . சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள் பற்றி பேரா. செய்யது அகமது கபீர் அவர்கள் சுதந்திர போராட்ட களத்தில் நடந்த பல மறைக்கப்பட்ட தகவல்களை தந்து சிறப்புரையை சிறப்பாக செய்தார் இதில் முன்னாள் தலைவர் ஹாஜி முகம்மது முகைதீன் செயலர்’ சூப்பர்

Read More

மல்லிப்பட்டினம் கிராம சபை கூட்டத்தில் சமுதாய நலமன்றத்தினர் முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றம்…!

Posted by - August 15, 2018

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்ற தலைவர் கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை மனு அளிப்பு. ஒவ்வொரு பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டம் சுதந்திர தினம் அன்று நடத்தப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும்.மேலும் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படக்கூடிய தீர்மானங்கள் வலிமை வாய்ந்தவையாகும்.அதனடிப்படையில் இன்று மல்லிப்பட்டினம் மனோராவில் தனி அலுவலர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. மல்லிப்பட்டினம் பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள சாலையில் குண்டும்,குழியுமாக இருப்பதால் சாலை சீரமைக்க வேண்டும்,குடிநீர் பிரச்சனை

Read More

மாணவர்களை ஊக்குவித்த அய்டா..!!

Posted by - August 15, 2018

நாடுமுழுவதும் 72 வது சுதந்திர தின விழா கோலாகலத்துடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதைப்போன்று இமாம் ஷாபி பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அச்சமயம் கடந்த மாதம் அதிரையில் உள்ள ஒரு ATM இயந்திரத்தில் அருகஎ இருந்த குறிப்பிடதக்க ஒரு ரொக்கத்தை காவல்துறையினரிடம் ஒப்படைத்த அப் பள்ளியின் பயிலும் மாணவர்கள் அப்சர் மற்றும் சுஹைலுக்கு ஜித்தா அய்டா நிர்வாகம் மாணவர்களுக்கு நேர்மையை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. இதில் அய்டாவின் நிர்வாகிகள் கலந்துக்கொண்டு

Read More

அதிரை ரஹ்மானியா மதரஸாவில் சுதந்தர தின விழா..!!

Posted by - August 15, 2018

நாடுமுழுவதும் 72 வது சுதந்திர தின விழா கோலாகலத்துடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரஹ்மானியா மதராஸாவில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முஹம்மது குட்டி ஆலிம் அவர்கள் தேசிய கொடியேற்றினர்.  

Read More

மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா உற்சாக கொண்டாட்டம்…!

Posted by - August 15, 2018

நாடுமுழுவதும் 72 வது சுதந்திர தின விழா கோலாகலத்துடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. வெங்கடாசலம் தேசிய கொடியேற்றி வைத்தார். சுதந்திர தின வரலாறு குறித்தும் சுதந்திர போராட்டத்தின் தியாகங்களையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். இந்த விழாவில் மல்லிப்பட்டினம் ஜமாஅத் தலைவர் அல்லாபிச்சை,AK தாஜீதீன்,ஹசன் முகைதீன்,அப்துல் ஜப்பார்,அப்துல் ஹலீம்,வீரையன் முகமது காசிம்,நூருல் அமீன்,அன்சாரி AHR.ஹமீத், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.    

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)