அதிரை ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் திருவிழா!!

Posted by - August 8, 2018

அதிராம்பட்டினத்தின் பிரசித்தி பெற்ற சமேத முத்துக்குமாரசாமி ஆலத்தில் அருள்பாலித்துவரும் ஸ்ரீ வீரமாகாளியம்மன் 15 ஆண்டு ஆடிமுளை பாரி கொட்டும் விழா இன்று காலை நடைபெற்றது. முன்னதாக கடந்த 31.7.18 செவ்வாய் கிழமை 6 மணிக்கு பாலிகை போடும் நிகழ்ச்சி மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று பாலிகை சமுத்திரத்தில் விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து வரும் வெள்ளிகிழமையன்று மாலை பால்குடம் அபிஷேகம் மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெறும் என கோவில் நிர்வாகத்தின்

Read More

மலேசியா சிறையில் உள்ள தமிழருக்கு உதவிடுவீர் !

Posted by - August 8, 2018

லேசியாவிற்கு வேலைக்காக சென்ற பட்டுக்கோட்டை கரிக்காட்டை சேர்ந்தவர் சலீம் இவர் வேலைத்தேடி மலேசியா சென்றதாகவும், அங்கு அங்கீகரிக்கப்படாத நிறுவனத்தில் பணியாற்றிய நிலையில் காவல் துறையால் கைது செய்து சிறையில் உள்ளார் என மலேசியாவில் இருந்து அதிரை எக்ஸ்பிரஸ்சை தொடர்பு கொண்டு தகவல் தந்தனர். எனவே அப்பாவியாக சிறையில் வாடும் தமிழர் ஒருவருக்கு உதவிகள் கிடைத்திட பகிர்ந்து உதவிட வேண்டுகிறோம்.

Read More

மல்லிப்பட்டினம் திமுகவினர் மௌன ஊர்வலம்…!

Posted by - August 8, 2018

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் திமுக சார்பாக மௌன ஊர்வலம் நடைபெற்றது. திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுகவினர் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக மல்லிப்பட்டினம் திமுகவினர் சார்பாக கடைத்தெருவில் இருந்து மனோரா வரை மௌன ஊர்வலம் நடைபெற்றது.இறுதியாக பேருந்து நிலையத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட மீனவர்அணி அமைப்பாளர் VMR.ராபிக் தம்ழ் மாநில மீனவ பேரவை செயலாளர் AK.தாஜூதீன்,முன்னாள் மாவட்ட மீனவர்அணி அமைப்பாளர் MKM.அபுதாஹீர், ஒன்றிய இளைஞர் அணி

Read More

அதிரையில் கலைஞருக்கு இறுதி அஞ்சலி ஊர்வலம்!!

Posted by - August 8, 2018

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுபெரும் தலைவரும் முன்னால் முதல்வருமான கலைஞர் கருணாநிதி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவையொட்டி பல்வேறு ஊர்களில் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதே போல் அதிரை நகர திமு கழகத்தின் சார்பில் இன்று பேரூந்து நிலையத்தில் இருந்து கலைஞருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக பேரணி நடைபெற்றது. இந்த அமைதிப் பேரணியில் திமுக நிர்வாகிகள், முன்னால் பேரூர் தலைவர்,மகளிர் அணி, பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Read More

அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில் வந்தது அண்ணா சமாதி!

Posted by - August 8, 2018

திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, அண்ணா சமாதிக்கு வலதுபுறம் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில் அண்ணா சமாதி வந்துள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.

Read More

கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதற்கான பணிகள் தொடங்கின!

Posted by - August 8, 2018

திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, அண்ணா சமாதிக்கு வலதுபுறம் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதற்கான பணிகள் தொடங்கியுள்ளது.

Read More

கலைஞர் மறைவு : அதிரையும் வெறிச்சோடியது!!

Posted by - August 8, 2018

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சிறுநீரக தொற்று மற்றும் ரத்த அழுத்தம் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவ்வப்போது அவரின் உடல் நிலை தேறி வந்த நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். இதனையடுத்து தமிழகம் முழுதும் கடைகள் அடைக்கப்பட்டு மறைந்த முன்னால் முதல்வருக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டு வருவது போல, அதிரையிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனால் அதிரை நகரமும் வெறிச்சோடிய நிலையில் காணப்படுகிறது.

Read More

கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

Posted by - August 8, 2018

  இறப்பிற்கு பின்னும் 14 மணி நேரம் போராடி இட ஒதுக்கீட்டில் வெற்றி பெற்ற கருணாநிதி! திமுக தலைவர் கருணாநிதி அடக்கம் செய்யப்படுவது தொடர்பான வழக்கில் மெரினாவில் இடமளித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிரடி உத்தரவு!

Read More

மறைந்த தந்தைக்கு மு.க ஸ்டாலின் உணர்ச்சிப் பூர்வ கண்ணீர் கடிதம்!!

Posted by - August 8, 2018

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு அவரது மகனான செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உணர்ச்சிப் பூர்வமான கடிதத்தை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ஒரே ஒருமுறை இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’! எங்கு சென்றாலும் சொல்லிவிட்டுச் செல்லும் எனது ஆருயிர்த் தலைவரே, இம்முறை ஏன் சொல்லாமல் சென்றீர்கள்? என் உணர்வில்,உடலில், ரத்தத்தில், சிந்தனையில்,இதயத்தில் இரண்டறக் கலந்து விட்ட தலைவா! எங்களையெல்லாம் இங்கேயே ஏங்கவிட்டு எங்கே சென்றீர்கள்? “ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்”

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)