மரண அறிவிப்பு ~ திமுக மீராஷாகிப் அவர்கள்…!!

Posted by - July 5, 2018

அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் க.மீ.மு முகமது அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது மரைக்காயர் அவர்களின் மருமகனும், க.மீ.மு ஹாஜா அலாவுதீன் அவர்களின் சகோதரரும், மர்ஹூம் வைமூ முகமது முகைதீன் அவர்களின் மச்சானும், ராஜிக் முகமது, சாதிக் பாட்சா ஆகியோரின் மாமனாரும், ப.கு என்கிற பகுருதீன், அன்வர்தீன் ஆகியோரின் தகப்பனாரும், திமுக அதிரை பேரூர் முன்னாள் செயலாளரும், தற்போதைய மாவட்ட பிரதிநிதியுமாகிய (D.M.K) மீராசாஹிப் அவர்கள் இன்று (05.07.2018) வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் வஃபாத்தாகி

Read More

அதிரையில் ஜெக்கரிய்யா பர்னிச்சர் நிறுவனத்தின் புதிய கிளை துவக்கம் !!

Posted by - July 5, 2018

அதிரை புதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் மா.மா.செ.நல்ல அபுபக்கர் மரைக்காயர் அவர்களால் 1954ல் மர கட்டில் வேலைபாடுகள் ஆரம்பிக்கப்பட்டது. பிறகு மர்ஹூம் N.A.ஜக்கரியா அவர்களால் (ஹலீமா பர்னிச்சர்) என்ற பெயரில் தொடரப்பட்டு தற்போது ஜக்கரியா பர்னிச்சர் என்ற பெயர் மாற்றத்தோடு இயங்கி கொண்டிருக்கிறது. அந்த நிறுவனத்தை விரிவாக்கம் செய்து நமதூர் ECR ரயில்வே கேட் பெட்ரோல் பங்க் அருகில் இன்று புதிதாக துவங்கியுள்ளனர். தொடர்புக்கு : 9677741737

Read More

பட்டுக்கோட்டை சாலை RKP முக்கத்தில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்படுமா ?

Posted by - July 5, 2018

அதிரை – பட்டுக்கோட்டை சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் பட்டுக்கோட்டை சாலை RKP முக்கத்தில் இருந்து மூன்று முக்கிய ஊர்களுக்கு செல்லும் சாலைப்பிரிவுகள் உள்ளன. பட்டுக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டை , ஆலங்குடி போன்ற ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் அதிராம்பட்டினம் செல்லாமல் சுற்றுவட்ட பாதைகளில் செல்ல RKP முக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதனிடையே இந்த பகுதியின் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு நடுவே கட்டிட பிரிவுகள் ஏற்படுத்தபட்டுள்ளன. இப்பகுதியில் அவ்வப்போது சாலை விபத்து எற்பட்டு

Read More

அதிரையில் இன்று நடைபெற்ற கால்பந்து காலிறுதி ஆட்டத்தின் முடிவுகள் !

Posted by - July 5, 2018

அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் காஜாமலை திருச்சி அணியினரும் தென்னரசு பள்ளத்தூர் அணியினரும் விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற நடைபெற்ற இந்த காலிறுதி ஆட்டத்தில் இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை. இறுதியில் ட்ரைபிரேக்கர் முறையில் தென்னரசு பள்ளத்தூர் அணி காஜாமலை திருச்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. நாளைய[06.07.2018] தினம் அரையிறுதி ஆட்டம் விளையாட இருக்கின்ற அணிகள் : தென்னரசு

Read More

அதிரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி !

Posted by - July 5, 2018

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள கரிசவயல் பகுதியில் இன்று (05.07 2018) ஒருவர் சாலை ஓரம் சென்றுகொண்டு இருந்த அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் அந்த அடையாளம் தெரியாத நபர் விபத்தில் சிக்கியுள்ளார். விபத்துக்குள்ளாகிய இவரது காதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தர். இவரது உடல் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் பிரரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரை பற்றிய தகவல் தெரிந்தால் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தை தொடர்பு

Read More

அதிரையில் மின் வயர்களை அறுத்து செல்லும் லாரிகளால் அவதி !!

Posted by - July 5, 2018

  அதிராம்பட்டினத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்தப்படியாக தேங்காய் விவசாயம் அதிகமாக உள்ள பகுதி இப்பகுதியில் விளையும் தேங்காய்களை சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்வார்கள். இவர்கள் வாங்கும் தேங்காய்களை மட்டை உரித்தே எடுத்து செல்கின்றனர். இதில்.சேமிக்கப்பட்ட மட்டைகளை தனியார் கயிறு நிருவனங்களுக்கு மண்டி உரிமையாளர்கள் விறபனை செய்கின்றனர். இம்மட்டைகள் தூத்துக்குடி, ஆறுமுகனேரி உள்ள தொலைதூரங்களுக்கு லாரிகள் மூலம் எடுத்து செல்கின்றன. இவைகள் அதிரை சி எம் பி லைன் வழியாக மலைப்போல் குவிக்கப்பட்டு எடுத்து செல்கின்றனர். இதனால்

Read More

ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது – தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி !

Posted by - July 5, 2018

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் உத்தரவுக்குத் தடை விதிக்க , பசுமைத் தீர்ப்பாயம் மறுப்பு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி, நீண்ட நாள்களாகப் போராட்டம் நடைபெற்றுவந்தது. கடந்த மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற நூறாவது நாள் போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தினால் , போலீஸார் துப்பாகிச் சூடு நடத்தினர். இதில், 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் பின்னர், ‘ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும்’ எனத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதைத்

Read More

அதிரையரின் இருசக்கர வாகனம் இசிஆர் சாலையில் திருட்டு…!

Posted by - July 5, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இசிஆர் சாலையில் இருசக்கர வாகனம் திருட்டு. அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவை சேர்ந்தவர் பாலாஜி.இவர் இசிஆர் சாலையில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வெளியே சென்றுள்ளார். வேலையை முடித்துவிட்டு திரும்புகையில் வாகனத்தை காணவில்லை, இதனால் அதிர்ச்சியடைந்த பாலாஜி இருசக்கர வாகனத்தை சுற்றும் தேடியுள்ளார், வாகனம் கிடைக்கவில்லை. வண்டி.எண்:Tn63 am7641. FZ VERISION 2.0 இந்த நம்பர் உடைய வண்டியை எங்கு கண்டாலும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்:7845572637.  

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)