நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம்?

Posted by - July 4, 2018

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலமே உள்ள நிலையில் இன்று பெங்களூருவிலிருந்து திருவாரூக்கு 1580 மின்னணு வாக்கு இயந்திரங்கள் வந்தடைந்தது நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்துவதற்காக இறங்கிய இயந்திரங்களை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Read More

அதிரையில் நடைபெற்ற கால்பந்தாட்டத்தில் அதிரை SSMG அணி அசத்தல் வெற்றி !

Posted by - July 4, 2018

அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அதிரை SSMG அணியினரும் தினேஷ் மெமோரியல் புதுக்கோட்டை அணியினரும் விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இவ்வாட்டத்தில் சிறப்பாக விளையாடிய அதிரை SSMG அணி 3-2 என்ற கோல் கணக்கில் தினேஷ் மெமோரியல் புதுக்கோட்டை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. நாளைய[05.07.2018] தினம் ஆட்டம் விளையாட இருக்கின்ற அணிகள் : காஜாமலை திருச்சி – தென்னரசு பள்ளத்தூர்

Read More

முத்துப்பேட்டையில் பயங்கர தீ விபத்து..!!

Posted by - July 4, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- திருவாரூர் மாவட்டம்,முத்துப்பேட்டை தர்கா அருகிலுள்ள கடைகளில் தீ விபத்து. இன்று முத்துப்பேட்டை தர்காவிற்கு அருகில் உள்ள டீ கடையின் மேல்புறத்திலுள்ள மின்கம்பத்தில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக தீ பற்றியது, அந்த வேகமாக பரவி அடுத்தடுத்து இருந்த கடைகளுக்கும் தீ வேகமாக பரவி பொருட்கள் எரிந்தன, இதனையடுத்து அருகில் இருந்த இளைஞர்கள்,பொதுமக்கள் அனைவரும் இணைந்து தீயை அணைக்க முயன்றனர். தகவலயறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.இந்த சம்பவத்தால் முத்துப்பேட்டையில் பரபரப்பாக

Read More

அதிரையில் உள்ள அரசு அதிகாரிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்த கடற்கரைத்தெரு புதிய நிர்வாகத்தினர் !(படங்கள்)

Posted by - July 4, 2018

அதிரை கடற்கரைத்தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான கூட்டம் கடந்த மாதம் 20 ம் தேதி நடைபெற்றது. இதில் கடற்கரைத்தெரு முஹல்லாவாசிகள் முன்னிலையில் புதிய நிர்வாகம் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று புதன்கிழமை(04.07.2018) கடற்கரைத்தெரு புதிய நிர்வாகிகள் மற்றும் முஹல்லாவாசிகள் அதிரை பேரூராட்சி அலுவலகம் , காவல் நிலையம் மற்றும் மின்வாரிய அலுவலகம் ஆகியவற்றுக்குச் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்து புதிய நிர்வாகிகளின் பெயர் பட்டியலை அளித்தனர். மேலும் கடற்கரைத்தெரு தொடர்பான ஆலோசனைகளை இப்புதிய

Read More

அதிரை ரோட்டரி சங்க புதிய நிர்வாக பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு !

Posted by - July 4, 2018

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் 2018-2019 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா வருகின்ற 08/07/2018 ஞாயிற்றுகிழமை மாலை 6.00 மணியளவில் அதிராம்பட்டினம் பவித்ரா திருமணம் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் 2018-2019 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக்கொள்ளவுள்ளனர். எனவே இவ்விழாவில் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துரை வழங்க வருகை தந்த விழாவினை சிறப்பித்து தருமாறு அதிரை மக்களுக்கு அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)