அதிரையில் 15-வது நாள் கால்பந்தாட்டத்தில் திருச்சி காஜாமலை அணி அசத்தல் வெற்றி !

Posted by - July 2, 2018

அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கௌதியா நாகூர் அணியினரும் திருச்சி காஜாமலை அணியினரும் விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இவ்வாட்டத்தில் சிறப்பாக விளையாடிய திருச்சி காஜாமலை அணி 3-1 என்ற கோல் கணக்கில் நாகூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. நாளைய[03.07.2018] தினம் காலிறுதி ஆட்டம் விளையாட இருக்கின்ற அணிகள் : திருச்சி காஜாமலை – தென்னரசு பள்ளத்தூர்

Read More

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கிய அதிரை ரோட்டரி சங்கத்தினர் !

Posted by - July 2, 2018

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக 01/07/2018 ஞாயிறு அன்று அன்னபூர்ணா தினத்தை முன்னிட்டு அதிரையை அடுத்த ராஜாமடத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கும் அங்குள்ள அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. இவ்விழாவினை அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகத்தின் தலைவர் Rtn.M.k. முகமது சம்சுதீன் , செயளாலர் Rtn.Z. அகமது மன்சூர் , பொருளாளர் Rtn.M. சாகுல் ஹமீது ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி பயிலும் காப்பக மாணவர்களின் சீருடைக்காக

Read More

அதிரை அருகே நடைபெற்ற கபாடி தொடர்போட்டி !

Posted by - July 2, 2018

அதிரை அடுத்துள்ள அணைக்காட்டில் கில்பர்ட் மெமோரியல் கபாடி கழகம் நடத்திய நான்காம் ஆண்டு கபாடி போட்டி நேற்று முன்தினம் முதல் நடைப்பெற்று வந்தது. இதில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் வென்ற பழஞ்சூர் அணி முதல் பரிசை தட்டிச் சென்றது. முதல் பரிசு : ரூ.10,000 -பழஞ்சூர் இரண்டாம் பரிசு : ரூ.8,000 – அணைக்காடு மூன்றாம் பரிசு : ரூ.6,000 – அணைக்காடு நான்காம் பரிசு – ரூ.4,000 – மணப்பாறை இதில் சிறப்பாக விளையாடிய

Read More

அதிரையில் அதிகரிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ! குடிநீரை விலைகொடுத்து வாங்கும் அவலம் !!

Posted by - July 2, 2018

  அதிராம்பட்டினம் பேரூரில் சுமார் 75 முதல் 80ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் முறையாக பேரூராட்சி விதிகளுக்கு உட்பட்டு வரி செலுத்தி வருகின்றனர். இதனிடையே அதிரை மக்கள் தொகைக்கு ஏற்றவாறு குடி நீர் வினியோகம் செய்ய பேரூராட்சியில் போதுமான ஆழ்துளை கிணறுகள் இருந்தும் நிலத்தடி நீர் குறைவாக உள்ளதால் நீரேற்றம் செய்வதில் கால தாமதம் மற்றும் பற்றாக்குறை நிகழ்கிறது. இதனால் அத்தியாவசிய குடிநீர் தேவைக்கு தனியார் நிறுவன நீர்களை வாங்கி பருகும் அவல நிலைக்கு அதிரை மக்கள்

Read More

பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய கலாம் நண்பர்கள் இயக்கத்தினர் !

Posted by - July 2, 2018

திருவாரூரில் கலாம் நண்பர்கள் இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் முகாம் நடைபெற்றது. சுற்றுச்சூழல் மாசுபாடு பெருகி வரும் இக்காலத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது நம் அனைவரின் தலையாய கடமையாக உள்ளது. மரங்களை அழித்ததால் ஏற்பட்டதன் விளைவு , இன்று மழையே இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். இந்நிலையில் தான் நேற்று(01/07/2018) ஞாயிற்றுக்கிழமை திருவாரூரில் கலாம் நண்பர்கள் இயக்கத்தின் சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலாம் நண்பர்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் , ஒருங்கிணைப்பாளர்கள் ,

Read More

காணாமல் போன முதியவர் கிடைத்துவிட்டார் !

Posted by - July 2, 2018

கடந்த 30ஆம் தேதி முதல் அதிரை கரையூர் தெருவை சேர்ந்த முதியவர் மாரியப்பன் வயது 68 என்பவரை காணவில்லை என அவரது குடும்பத்தினர் வைத்த வேண்டுகோளை அடுத்து நமது தளம் உள்ளிட்டவைகளில் படத்துடன் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து, சமூகவலைதளம் , வாட்ஸ் ஆப் ஆகியவலைகளில் பரவியது. இந்நிலையில் மதுக்கூரில் இவர் சுற்றி திரிவதாக தகவல் கிடைத்துள்ளன என்றும் அவரை மீட்க உறவினர்கள் சென்றுள்ளதாக அவரது மருமகன் புஷ்ப ராகவன் தெரிவித்தார். மேலும் இதற்கு உதவிய அனைவருக்கும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)