அதிரையை சேர்ந்த பெண் வழக்கறிஞர் SDPIயின் மாநில செயலாளராக தேர்வு !

Posted by - July 1, 2018

அதிராம்பட்டினம் SDPI கட்சியை சேர்ந்தவர் வழக்கறிஞர் நிஜாம் அவர்களின் மனைவியும் வழக்கறிஞருமான N சஃபியா அவர்கள் SDPI கட்சியின் மாநில செயலாளராக தேர்வாகியுள்ளார். முன்னதாக தலைவர் பொறுப்பில் இருந்த KKSM தெஹ்லான் பாக்கவி துணைத்தலைவராகவும் நெல்லை.முபாரக் மாநில தலைவராக இன்று பொறுப்பேற்று கொண்டனர்.

Read More

அதிரையில் நடைபெற்ற கைப்பந்து தொடர்போட்டியில் பாண்டி போலீஸ் அணியினர் சுழற்கோப்பையை தட்டிச்சென்றனர்…!!

Posted by - July 1, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று (01.07.2018) ஞாயிற்றுக்கிழமை அதிரை w s c நடத்திய கைப்பந்துத்தொடர் போட்டியில் ‘பாண்டிச்சேரி போலீஸ்’ அணியினர் முதல் பரிசை தட்டிச்சென்றனர். இரண்டாம் பரிசை ‘கொங்கு ஈரோடு அணியினர்’ தட்டிச்சென்றனர். மூன்றாம் பரிசை ‘கீரமங்களம் அணியினரும்’. நான்காம் பரிசை ‘திருச்சி ஜே.எம்.சி கல்லூரி அணியினரும்’ தட்டிச்சென்றனர். இதில் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் திரு. சங்கர் அவர்களும், அமிரக TIYA தலைவர் என்.எம்.எஸ் சேக் பரித் அவர்களும், தாயக

Read More

அதிரையை சேர்ந்த முதியவரை காணவில்லை !

Posted by - July 1, 2018

அதிராம்பட்டினம் மாரியம்மன் கோவில் தெருவை (கரையூர் தெரு)சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 68) சற்று மன நிலை பாதிக்கப்பட்டவர். நேற்று (30.06.2018) வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர் என்றும், அவர் காணாமல் போன அன்று வெள்ளை சட்டையும் வெள்ளை நிறத்தில் வேஷ்டியும் அணிந்து இருந்ததாக அவரது குடும்பத்தினர்கள் தெரிவித்துள்ளனர். இவரை பற்றிய தகவல் தெரிந்தால் பின்வரும் மொபைல் நம்பருக்கு தகவல் தெரிவிக்கவும். +917418443754

Read More

அதிரையில் இன்று நடைபெற்ற கால்பந்தாட்ட காலிறுதி போட்டியின் முடிவுகள் !

Posted by - July 1, 2018

அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நேதாஜி தஞ்சாவூர் அணியினரும் காட்டுத்தலைவாசல் காரைக்குடி அணியினரும் விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இவ்வாட்டத்தில் சிறப்பாக விளையாடிய நேதாஜி தஞ்சாவூர் அணி 5-3 என்ற கோல் கணக்கில் காட்டுத்தலைவாசல் காரைக்குடி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. நாளைய[02.07.2018] தினம் காலிறுதி ஆட்டம் விளையாட இருக்கின்ற அணிகள் : கௌதியா நாகூர் – திருச்சி காஜாமலை

Read More

அதிரை இக்ரா பள்ளி சிறுவர்களின் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி !(படங்கள்)

Posted by - July 1, 2018

அதிரை கீழத்தெரு ஜாவியா சாலையில் இக்ரா இஸ்லாமிக் பள்ளி மற்றும் மக்தப் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 60-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயன்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியின் 3-ஆம் ஆண்டு ஈத் மிலன் (பெருநாள் சந்திப்பு ) நிகழ்ச்சி சிறுவர் , சிறுமியர்களுக்கு நேற்று 30/07/2018 சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறுவர் , சிறுமியர்களுக்கு தின்பண்டம் , பரிசு வழங்கப்பட்டு அவர்களை ஆர்வமூட்டும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

Read More

எஸ்டிபிஐ கட்சியின் புதிய மாநில நிர்வாகிகள் அறிவிப்பு…!

Posted by - July 1, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- எஸ்டிபிஐ கட்சியின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நெல்லை முபாரக் என்கிற V.M.S முகமது முபாரக் (மாநில தலைவர்) மாநில துணை தலைவர்கள்:- A. அம்ஜத் பாஷா KKSM.தெஹ்லான் பாகவி மாநில பொதுசெயலாளர்:- M.நிஜாம் முகைதீன். B.அப்துல் ஹமீத் அச.உமர் பாரூக் மாநில செயலாளர்:- T.ரெத்தினம் S.அமீர் ஹம்ஸா A.அபுபக்கர் சித்திக் S.அகமது நவவி வழக்கறிஞர் N.சஃபியா மாநில பொருளாளர்:- V.M.அபுதாஹீர்

Read More

அதிரை மருத்துவர்களுக்கு வாழ்த்து !

Posted by - July 1, 2018

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு இன்று[01.07.2018] ஞாயிற்றுக்கிழமை அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் அதிரையில் உள்ள மருத்துவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டன. இதில் அதிரை லயன்ஸ் சங்க தலைவர் பேராசிரியர் அப்துல்காதர் , செயலாளர் சூப்பர் அப்துல் ரஹ்மான் , மாவட்ட தலைவர் பேராசிரியர் செய்யது அகமது கபீர் , சாரா அஹமது , கண்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Read More

அதிரையில் மூச்சு விடுமா? முஸ்லீம் லீக் !

Posted by - July 1, 2018

  பரம்பரியமும் கண்ணியமும் கொண்ட கட்சியாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி இந்திய சுதந்திர போரட்டத்தின் நடுவே உதித்த மக்கள் பேரியக்கமாகும். கடந்த காலங்களில் முஸ்லீம்.லீக் செய்த சாதனைகள் ஏராளம். கண்ணியமிக்க காயிதே மில்லத் முதல் தற்போதைய தேசியத்தலைவர் காதர் முகைதீன் வரை நல்லதொரு அரசியல் காய் நகர்த்தலை தந்திரத்துடன் செய்து வருகின்றனர். ஆனால் இஸ்லாமிய மக்கள் அதிகம் உள்ள ஊர்களில் ஒன்றான அதிராம்பட்டினத்தின் முஸ்லீம் லீக்கின் கிளை மிகவும் கவலையளிக்க கூடியதாக உள்ளது என

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)