இடி மின்னலுடன் அதிரையை குளிர்வித்த அழகிய மழை !

Posted by - June 30, 2018

அதிரையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மழை பெய்யாதா ? என அதிரையர்கள் ஏக்கத்துடன் இருந்து வந்தனர். இந்நிலையில் திடீரென இன்று இரவு 9 மணியளவில் இருந்து அதிரையில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இம்மழையால் ஏக்கத்துடன் இருந்த அதிரையர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Read More

அதிரை கால்பந்து ரசிகர்களின் ஏற்பாட்டில் உலகக்கோப்பை கால்பந்து ஆட்டம் நேரடி ஒளிபரப்பு..!

Posted by - June 30, 2018

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் கண்டு ரசித்து வருகின்றனர். அந்த வகையில் அதிக கால்பந்து ரசிகர்களின் ஆவலை நிறைவேற்றும் வகையில் அதிரை செக்கடி மேடு ஆஃபியா பழக்கடை அருகே உள்ள காலி மனையில் ராட்சத திரையில் உலகக்கோப்பை கால்பந்து தொடர்ப்போட்டியை நேரலை செய்கின்றனர். இதனை காண அதிரை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகிற பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை கால்பந்து போட்டியை உற்சாகமாக கண்டு ரசிக்கின்றனர்.

Read More

அதிரையில் 14-வது நாள் கால்பந்தாட்டத்தில் புதுக்கோட்டை அணி அபார வெற்றி !

Posted by - June 30, 2018

அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் NFC அதிரை அணியினரும் புதுக்கோட்டை அணியினரும் விளையாடினர். இதில் சிறப்பாக விளையாடிய புதுக்கோட்டை அணி 5-1 என்ற கோல் கணக்கில் NFC அதிரை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. நாளைய[01.07.2018] தினம் காலிறுதி ஆட்டம் விளையாட இருக்கின்ற அணிகள் : காட்டுத்தலைவாசல் காரைக்குடி – நேதாஜி தஞ்சாவூர்

Read More

குவைத்தில் பயங்கர தீ விபத்து..!!

Posted by - June 30, 2018

அரபி நாடுகளில் ஒன்றான குவைத்தில் உள்ள சுபுஹான் என்ற பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குவைத்தில் நேற்று (29/07/2018) வெள்ளிக்கிழமை இரவு சுபுஹான் என்ற பகுதியில் உள்ள ABC தனியார் குளிர்பான நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து ஏற்பட்டதை அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் தீயை அணைப்பதற்கு தீயணைப்பு துறையினர் சற்று திணறினர். இந்த தீவிபத்தினால் அப்பதி மக்கள்

Read More

“மனசாட்சி” பற்றி அதிரை ஜியாவுதீன் அவர்களின் சிறுகதை..!

Posted by - June 30, 2018

மனசாட்சி ! முன்பெல்லாம் நாங்கள் சுதந்திரமாக சுற்றித்திரிவோம். எங்கள் உணவுகளை மனிதர்களின் வீட்டில் இரவில் பழைய சோற்றை தண்ணீர் ஊற்றி மறுநாள் காலை எங்களுக்கு உணவாக வீட்டு வாசலில் வைப்பார்கள். அது கால்நடையாக வந்து போகும் எங்களுக்கு மிகவும் உதவியாகவும் உணவாகவும் இருந்தது. காலம் மாறிவிட்டது ! இப்பொழுதெல்லாம் இரவில் மனிதர்கள் சவர்மா , பரோட்டா , நூடுல்ஸ் , பீட்சா என வகை வகையான உணவுகளை உண்டு வருவதால் எங்களுக்கு காலை உணவாக பழைய சாதங்கள்

Read More

பட்டுக்கோட்டைக்கு வந்த பயணிகள் ரயிலை இனிப்பு கொடுத்து வரவேற்ற பயணிகள் சங்க நிர்வாகிகள் !!

Posted by - June 30, 2018

பட்டுக்கோட்டை- காரைக்குடி வரையிலான அகல பாதை பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் இந்த மார்க்கத்தில் இரயிலை இயக்க வேண்டும் என பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்தனர். இதனை அடுத்து காரைக்குடி- பட்டுக்கோட்டைக்கு பயணிகள் ரயிலை இயக்க தென்னக ரயில்வே கோட்ட பொறியாளர் அனுமதி வழங்கினார். இதனை தொடர்ந்து வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த சோதனை அடிப்படையிலான பயணிகள் ரயில் இயக்கபடும் என்றும், அதன்படி முதன் முதலாக பயணிகள் இரயில்.இன்று நன்பகல் 12 மணிக்கு பட்டுக்கோட்டை

Read More

மரண அறிவிப்பு : அப்துல்லாஹ் அவர்கள் !

Posted by - June 30, 2018

மரண அறிவிப்பு : பிலால் நகரை சேர்ந்த மர்ஹூம். அப்துர் ரஹ்மான் இவர்களின் மகனும் , மர்ஹூம். கோமேனி சாஹிப் இவர்களின் மருமகனும் , ஜைனுல் ஆபிதீன் , முஹம்மது , ரியாலுத்தீன் இவர்களின் தகப்பனாரும் , யாசர் அரஃபாத் அவர்களின் மாமனாருமாகிய அப்துல்லாஹ் அவர்கள் இன்று அதிகாலை 5 மணிக்கு பிலால் நகர் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு 5 மணியளவில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)