அதிரை செக்கடிக்குளம் அருகே ஒரு லேடிஸ் பர்ஸ் , சாவி கண்டெடுப்பு !!

Posted by - June 26, 2018

அதிரையில் உடல் ரீதியான விழிப்புணர்வை அடுத்து பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் நடைபயிற்சி செய்கிறனர். அதிரை செக்கடி மேட்டில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட வாக்வேயில் பெண்கள் அதிகமாக நடைபயிற்சி செய்கின்றனர். அதன்படி இன்று நடைபயிற்சி மேற்கொண்ட ஒருவர் தன் வசம் வைத்திருந்த பர்ஸ் , சாவிகொத்து ஆகியவைகளை தவறவிட்டு சென்றுள்ளார். இது அருகாமையில் உள்ள அஹமது ஸ்டோர்ஸில் பத்திரமாக உள்ளது. உரியவர் தகுந்த அடையாளங்களை சொல்லி பெற்றுசெல்ல வேண்டுமாய் அஹமது ஸ்டோர்ஸ் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Read More

லயன்ஸ் கிளப்பால் கவுரவிக்கப்பட்ட நாம் மனிதர் கட்சித் தலைவர் எஸ். தவ்ஃபீக் !

Posted by - June 26, 2018

இன்று சென்னையில் லயன்ஸ் கிளப்பின் சார்பில் தொழில் முனைவோர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் நாம் மனிதர் கட்சியின் நிறுவனத் தலைவர் எஸ். தவ்ஃபீக் அவர்கள் லயன்ஸ் கிளப்பின் சார்பில் கவுரவிக்கப்பட்டார்.

Read More

அதிரையில் 10-வது நாள் கால்பந்தாட்டத்தில் புதுக்கோட்டை அணி அபார வெற்றி !

Posted by - June 26, 2018

அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் புதுக்கோட்டை அணியினரும் ராமநாதபுரம் அணியினரும் விளையாடினர். இதில் அபாரமாக விளையாடிய புதுக்கோட்டை அணி 4-0 என்ற கோல் கணக்கில் ராமநாதபுரம் அணியை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றது. நாளைய தினம் விளையாட இருக்கின்ற அணிகள் : புதுக்கோட்டை – காரைக்குடி

Read More

ஜமால் முஹம்மது கல்லூரியில் பயின்ற அதிரை முன்னாள் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு !

Posted by - June 26, 2018

அதிராம்பட்டினம் மாணவர்கள் பல்வேறு நகரங்களுக்கு சென்று கல்வி பயின்று வருகின்றனர். அதில் பெரும்பான்மையாக திருச்சியில் உள்ள ஜமால் முஹம்மது கல்லூரியில் நமதூரை சேர்ந்த மாணவர்கள் கடந்த 2018 கல்வியாண்டு வரை படித்து வெளியேறி உள்ளனர். அவர்கள் தங்களை இந்த ஜமாலியன்ஸ் பழைய மாணவர்கள் தங்களை சங்கத்தில் இணைத்துக்கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறது. தங்களின் கீழ்கானும் விபரங்களை பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி தருமாறு கேட்டு கொள்கிறோம். பெயர் , முகவரி ,தொடர்பு எண் , படித்து வெளியேறிய ஆண்டு

Read More

தோஸ்த் படா தோஸ்த்..! முதல்வர் பழனிச்சாமி !!

Posted by - June 26, 2018

  என்னையும் OPSயும் யாராலும் பிரிக்க இயலாது… என சட்டபேரவையில் முதலமைச்சர் பழனிச்சாமி நகைச்சுவையாக தெரிவித்தார். . இன்று சட்டசபையில் நிறைய சுவாரசியமான சம்பவங்கள் நடந்தது. கிமு கிபி வார்த்தைகளை பாடப்புத்தகத்தில் இருந்து அகற்றியது, இசை நிகழ்ச்சி குறித்து துரைமுருகன் காமெடி செய்தது என்று நிறைய கலகலப்பான விஷயங்கள் நடந்தது. அதன் தொடர்ச்சியாக, திமுகவை சேர்ந்த மூத்த தலைவர் துரைமுருகன், முதல்வர் பழனிச்சாமி மற்றும், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோரின் நட்பு குறித்து கேள்வி

Read More

தோப்புத்துறையில் நடைபெற்ற மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி ![படங்கள்]

Posted by - June 26, 2018

தோப்புத்துறை யூனைடெட் பேட்மின்டன் கழகம் ஒருங்கிணைத்த மாநிலம் தழுவிய மாபெரும் ஆடவர் இரட்டையர் மின்னொளி இறகுப்பந்து போட்டி கடந்த சனிக்கிழமை படேசாஹிப் விளையாட்டு அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட அணி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இந்த போட்டியின் துவக்க நிகழ்ச்சி மற்றும் பரிசளிக்கும் நிகழ்வில் தோப்புத்துறை ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர். போட்டியில் பரிசு பெற்றவர்கள் விவரம் : முதல் பரிசு : ₹15,000 சரவணன் & கந்தவேல்

Read More

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் முப்பெரும் விழா ! சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிப்பு !!

Posted by - June 26, 2018

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பத்தாம் ஆண்டு துவக்க விழா , பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் சமூகத்தில் பல்வேறு தளங்களில் மக்களுக்கு சேவையாற்றிய சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று (ஜூன் 25) சென்னை ராயபுரம் ரம்ஜான் மஹாலில் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநில துணைத் தலைவர்கள் அம்ஜத் பாஷா , நெல்லை முபாரக் , பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது , செயலாளர்கள்

Read More

மல்லிப்பட்டினத்தில் ஜூன் 29ல் சாலை மறியல் மீனவ சங்கம் அறிவிப்பு….!

Posted by - June 26, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்ட விசைப்படகு உரிமையாளர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில செயலாளர் A.தாஜீதீன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 61நாள் மீன்படி தடைக்காலத்தில் இன்ஜின் பொருத்தப்பட்ட மற்ற அனைத்து நாட்டு படகுகளையும் அனுமதித்தால் அரசின் நோக்கம் நிறைவேறவில்லை, இதன் காரணமாக மீன் இனப்பெருக்கம் அடையாமல் விசைப்படகு மீனவர்களை நஷ்டமடைய செய்துள்ளது.இதனை கண்டுகொள்ளாமல் இருக்கும் மத்திய,மாநில அரசுகளை கண்டணம் தெரிவிப்பது, கடல் சீற்றம் எனக்கூறி கடலுக்கு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)