அதிரையில் நபி வழி பெருநாள் தொழுகை..!!

Posted by - June 14, 2018

  தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை சர்வேதேச அடிப்படையில் நபி வழி பெருநாள் தொழுகை 15.06.2018-வெள்ளிக்கிழமை அன்று காலை 7 மணிக்கு பெருநாள் தொழுகை நடைபெறும் .. இடம்: காட்டுக்குளம் அருகில் கல்லுக்கொல்லை தொடர்புக்கு :+91 7373070600 / +91 8124500455 அனைவரும் கலந்து கொண்டு நபிவழி படி பெருநாளை குடும்பத்துடன் திடலில் தொழுவோம் வாருங்கள்.  

Read More

தமிழகத்தில் நாளை (ஜூன் 15) பள்ளிகள் இயங்கும்: தமிழக அரசு அறிவிப்பு !

Posted by - June 14, 2018

ரம்ஜானுக்காக நாளை(ஜூன் 15) பள்ளி , அலுவலகங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் பிறை தெரியாத காரணத்தால் , நாளை மறுநாள்(ஜூன் 16) ரம்ஜான் கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்திருந்தார். இதனையடுத்து நாளை பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நாளை பள்ளிகள் ,அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும் எனவும் , நாளை மறுநாள் விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது..

Read More

தமிழகத்தில் நாளை மறுநாள் ரம்ஜான்.. தலைமை ஹாஜி அறிவிப்பு…!!

Posted by - June 14, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழகத்தில் நாளை மறுநாள்தான் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி சலாவூதின் முகமது அயூப் அறிவித்துள்ளார். நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தமிழக அரசு விடுமுறை அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை ஹாஜி சலாவூதின் முகமது அயூப் தமிழகத்தில் நாளை மறுநாள்தான் ரம்ஜான் கொண்டாடப்படும் என தெரிவித்தார். பிறை தெரியாததால் நாளை மறுநாள் ரம்ஜான் என்று

Read More

சவுதி,துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பிறை தென்பட்டது….

Posted by - June 14, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- துபாய்,சவுதி உள்ளிட்ட நாடுகளில் நாளை பெருநாள் அறிவிப்பு. இஸ்லாமிய மார்க்கத்தின் முக்கிய பண்டிகைகளில் நோன்பு பெருநாள் முஸ்லீம்கள் மத்தியில் கொண்டாடப்படும்.பிறை பார்த்து நோன்பு பிடித்து பிறை பார்த்து பெருநாள் கொண்டாட வேண்டும் என்பது அடிப்படையாகும். பிறை தேட வேண்டிய நாளான இன்று (14.6.2018) துபாய்,சவுதி நாடுகளில் பிறை தென்பட்டுள்ளது. எனினும் அதிகாரப் பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகததால் அரசின் அறிவிப்பிற்காக வளைகுடா மக்கள் காத்திருக்கின்றனர்.

Read More

சிறப்புக்கட்டுரை : உயிர் காக்கும் உயரிய தானம் – ரத்ததானம் !

Posted by - June 14, 2018

ரத்ததானமானது , நம்மைப் போன்றவர்கள் விபத்திலோ, அறுவை சிகிச்சையின் போதோ , சில சமயங்களில் பிரசவம் அடைந்த தாய்மாருக்கு அவசர சிகிச்சையின் போது அல்லது வேறு காரணங்களினாலோ உடலிலிருந்து இரத்த இழப்பு நேரிடும். அச்சமயத்தில் இரத்த தானம் செய்பவர்களாகிய நாம் உதவும் மனப்பான்மையோடு பயமில்லாமல் ஒருவரின் உயிரைக் காக்க மனமுன்வந்து செய்யும் மேன்மையான தொண்டே இரத்த தானம். உலகில் ஒட்டுமொத்தமாக 6.8 மில்லியன் மக்கள் வருடம் தோறும் இரத்த தானம் செய்கின்றனர். இரத்த தானம் செய்பவர்களைக் கொண்டு

Read More

அதிரையில் தீ விபத்து..!!

Posted by - June 14, 2018

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை அருகில் உள்ள சுடுகாட்டில் இன்று அதிகாலை 5.00 மணியளவில் தேங்காய் பஞ்சுகளில் திடீரென தீ பற்றியுள்ளது. சிறிது நேரத்தில் தீ பரவி வருகிறது. இதற்கு அருகில் அதிகமான குடிசை வீடுகள் இருக்கின்றன. இதனை அறிந்த நமதூர் இளைஞர்கள் தீ அணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தகவலறிந்த தீ அணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)