லாவண்யா & சாரா திருமண மண்டப நிர்வாகத்தின் இப்தார் சந்திப்பு நிகழ்ச்சி…!!

Posted by - June 12, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:-  அதிராம்பட்டினம் லாவண்யா திருமண மண்டபத்தில் சாரா அஹமது அவர்களின் குடும்பத்தினரால் இன்று 12.06.2018 27– வது நோன்பான இன்று இஃப்தார் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் முன்னாள் பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன்,அரசியல் பிரமுகர்கள், அனைத்து முஹல்லா ஜமாஅத்தினர்,மதநல்லிணக்கத்தை நிலைநாட்டும் வகையில் சகோதர மதததை சார்ந்த பிரமுகர்கள், என பலர் கலந்து கொண்டனர்.      

Read More

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தின சிறப்புக்கட்டுரை : குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கட்டும் !

Posted by - June 12, 2018

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின (ஜூன் 12) சிறப்புக்கட்டுரை : ஒவ்வொரு நாளும் காலையில் கதவைத் திறந்தால் நாளிதழ்களும் பால் பாக்கெட்டுகளும் வந்து விழுகின்றன. தெருவோரத்திலிருக்கும் சேட்டன் டீக்கடைக்குச் சென்றாலும், அண்ணாச்சிக் கடைக்குச் சென்றாலும் உங்களை வரவேற்பது யாராவது ஒரு சிறுவனாக இருப்பான். உணவகத்தில் நீங்கள் சாப்பிட்ட பின்னர் இலையை எடுப்பது ஒரு சிறுமியாக இருப்பாள். உங்கள் டூவீலர் பஞ்சரானாலும், பழுதானாலும் முதலில் அதைக் கவனிப்பது பிஞ்சுக் கரங்களாகத்தான் இருக்கும். இப்படி உங்களின் நாட்களை அழகாக

Read More

காரைக்குடி – பட்டுக்கோட்டை இரயில் சேவை ~ விரைந்து துவங்க கோரிக்கை !

Posted by - June 12, 2018

காரைக்குடி – பட்டுக்கோட்டை இடையிலான இரயில் சேவையை துவங்கிட வேண்டி பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் என். ஜெயராமன் , செயலாளர் வ. விவேகானந்தம் , துணை தலைவர் கா. லெட்சுமிகாந்தன் , செயற்குழு உறுப்பினர் டி. பாலசுப்பிரமணியன் ஆகியோர் இன்று 12.06.2018 காலை திருச்சியில் இரயில்வே கோட்ட மேலாளர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். விரைவில் இரயில் சேவையை துவங்க நடவடிக்கை எடுப்பதாக கோட்ட இரயில்வே மேலாளர் தெரிவித்தார்.

Read More

அதிரை தொழுகை நேரம் இப்பொழுது உங்கள் Mobile செயலியில்!

Posted by - June 12, 2018

‘I for Islam’ என்ற ஆன்ட்ராய்டுக்கான செயலி இந்த ரமழானோடு 1 வருடம் பூர்த்தியாகும் இந்நேரத்தில், இந்த புனித ரமலான் மாதத்தில், அதிரையர்களின் வசதிகளுக்காக Luffa Labs மென்பொருள் நிறுவனம் மற்றுமொரு புதிய update தங்களின் செயிலிக்கு வெளியிட்டுள்ளது. அதிரையின் பல தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சியில் முன்னின்று வெளியிட்டு வரும் இந்த மென்பொருள் நிறுவனம் இந்த update மூலம் அதிரை சுன்னத்துல் ஜமாத் பள்ளிகளின் தொழுகை நேர அட்டவணை சேர்க்கப்பட்டுள்ளது. வருடம் முழுவத்திற்குமான அதிரை தொழுகை நேரங்களை

Read More

மரண அறிவிப்பு:- மேலத்தெருவை சேர்ந்த S.M.முஹைதீன் அப்துல் காதர்..!!

Posted by - June 12, 2018

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் S.M.முஹம்மது அலியார் அவர்களின் மகனும், அ.கா.அஹமது கபீர் அவர்களுடைய மச்சானும், அ.கா.ஜபருல்லா அவர்களுடைய மாமனாரும், முஹம்மது நிஜாமுதீன், முஹம்மது சிராஜுத்தீன், முஹம்மது அமீர் அலி, ஃபெரோஸ்கான் ஆகியோரின் தகப்பனாருமாகிய S.M.முஹைதீன் அப்துல் காதர் அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன் அன்னாரின் ஜனாசா நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)