அதிரை அருகே பேருந்து மோதி மாணவன் உயிரழப்பு…!

Posted by - June 4, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,அதிரை அருகே கரிக்காட்டில் ASM பேருந்து மோதி பள்ளி மாணவர் உயிரழப்பு. பட்டுக்கோட்டையை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் தலை மீது பேருந்து ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே மாணவன் உயிரழப்பு.இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் உடல் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Read More

நீட் தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியீடு- சிபிஎஸ்இ !!

Posted by - June 4, 2018

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நீட் தேர்வு முடிவுகள் ஒருநாளுக்கு முன்பாக இன்று வெளியிடப்படும் என சிபிஎஸ்இ தகவல் கூறியதாக மனிதவள மேம்பாட்டுத்துறை செயலர் அனில் ஸ்வரூப் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். தற்போது அதை உறுதி செய்து, இன்று மதியம் 2 மணிக்கு மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், இயற்கை மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட்

Read More

கருணாநிதியின் 95-வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடிய அதிரை திமுகவினர் !!

Posted by - June 4, 2018

இந்தியாவின் முதுபெரும் அரசியல்வாதியும் திமுகவின் தலைவருமான கருணாநிதியின் 95 -வது பிறந்தநாள் நேற்று (03/06/2018) ஞாயிற்றுக்கிழமை தமிழகமெங்கும் திமுக தொண்டர்களால் கொண்டாடப்பட்டது. அதேபோல் அதிரை பேரூர் திமு கழகம் சார்பிலும் அதிரை அண்ணா படிப்பகத்தில் காலை 8.30 மணியளவில் கருணாநிதியின் 95 – வது பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் EX MLA. ஏனாதியார், பேரூர் கழக செயலாளர் இரா. குணசேகரன் , மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் K. செல்வம்

Read More

தஞ்சை பெரிய கோயிலில் பக்தர்கள் நூதன வழிபாடு!!

Posted by - June 4, 2018

தஞ்சை பெரிய கோயிலில் தரைத்தளத்தை புதுப்பிப்பதற்காக அகற்றிய பழைய கற்களை அடுக்கி வைத்து பக்தர்கள் நூதன வழிபாடு நடத்தி வருகின்றனர். தஞ்சை பெரிய கோயில் எனும் பிரகதீஸ்வரர் கோயிலை 1,000 ஆண்டுகளுக்கு முன் ராஜராஜசோழன் கட்டினார். இந்த கோயிலுக்கு தினம்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயிலில் அடுத்தாண்டு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்காக பல லட்ச ரூபாய் செலவில் கோயிலின் சுற்று பிரகார தரைகளில் புதிதாக கற்கள் பதிப்பதற்காக பழைய கற்களை அகற்றும் பணி

Read More

மரண அறிவிப்பு ~ அப்துல் மஜீத்…!

Posted by - June 4, 2018

  அதிராம்பட்டினம், மேலத்தெருவை சார்ந்த சிராஜுதீன் அப்துல் சாதிக் (சாவன்னா) என்கிற சாகுல் ஹமீது கைசர் இவர்களுடைய தகப்பனாரும் , பேட்டரி மாஜிதீன் மாமனருமாகிய அப்துல் மஜீத் அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன் ஜனாஸா அடக்கம் விபரம் பின்பு அறிவிக்கப்படும்

Read More

உகாண்டாவில் இரண்டு அனாதை இல்லங்களுக்கு தமுமுக சார்பாக இஃப்த்தார் நிகழ்ச்சி..!

Posted by - June 4, 2018

உகாண்டாவில் தமுமுக சார்பாக இரண்டு அனாதை இல்லத்திற்கு இப்தார் நிகழ்ச்சி..!! உகாண்டா மண்டலத்தின் தமுமுக நிர்வாகிகள் மனிதநேய பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து இன்று (04/06/2018) திங்கள்கிழமை தமுமுக சார்பாக உகாண்டாவில் மளலைகளுடன் ஒரு நாள் இப்தார் நிகழ்ச்சி செழிப்புடன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தமுமுக உகான்டா மண்டலத்தின் சார்பாக இன்று இரண்டு அனாதை இல்லங்களுக்கு தமுமுகவினர் மற்றும் நல்லுள்ளம் கொண்டவர்களின் பங்களிப்புகளை ஒருங்கிணைத்து 10மில்லியன் அளவில் உதவிகள் வழங்கப்பட்டது. மென்மேலும் இதுபோன்று சேவைகளை செய்ய அதிரை

Read More

முத்துப்பேட்டை முஸ்லிம் இளைஞர்களின் மனித நேய பணி !!

Posted by - June 4, 2018

முத்துப்பேட்டை ஆசாத் நகர் புதிய பேருந்து நிலையம் அருகில் சாலை விபத்தில் கால் முறிந்த மாற்று மத இளைஞரை மீட்ட முத்துப்பேட்டை முஸ்லீம் இளைஞர்கள் அவரை முதலுதவிக்காக துரிதமாக மருத்துவமனையில் சேர்த்தனர். தெற்குகாட்டை சேர்ந்த சந்தோஷ் என்ற சகோதரருக்கு கால் முறிந்துவிட்டது. இதனை அறிந்த இளைஞர்கள் உடனடியாக முத்துப்பேட்டை தமுமுக ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு அடிபட்டவரின் குடும்பத்திற்க்கு உடனே தகவல் கொடுத்து அவர்கள் வரும் வரை காத்திருந்து பெற்றோர்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)