BREAKING NEWS அதிரை கடைத்தெரு பகுதியில் தீ விபத்து..!! அணைக்கும் பணியில் இளைஞர்கள்..!!

Posted by - April 25, 2018

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடைத்தெருவில்  சுமார் 11மணியளவில் திடீரென தீ விபத்து. அதிராம்பட்டினம் கடைத்தெரு மார்க்கெட் பின்புறம் உள்ள விறகு கடையில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. லேசாக உருவான தீ கொஞ்ச கொஞ்சமாக அனைத்து பகுதிகளுக்கும் பரவ தொடங்கியது.அக்கப்பக்கத்தினர் தகவலறிந்து சம்பவ  இடத்திற்கு சென்ற இளைஞர்கள் போராடி தீயை கட்டுப்படுத்தி வருகின்றனர். இந்த தீயை தடுக்க 100க்கு மேற்பட்டோர் சம்பவ இடத்தில் குவிந்தனர். ஆனால், தீ அனைப்பு வாகனம் தாமதமாக வந்தனால் பொதுமக்கள்

Read More

மரண அறிவிப்பு~கட்டமரைக்காயர் வீட்டைச் சேர்ந்த ஹாஜி.S.M.S. அப்துல் ரவூப் அவர்கள்..!!

Posted by - April 25, 2018

தட்டாரத்தெரு கட்டமரைக்காயர் வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் செ.மு.செ சேக் தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி சுல்தான் அப்துல் காதர், ஹாஜி அப்துல் பரக்கத் ஆகியோரின் சகோதரரும், ஹாஜி மஜ்பா ஜபருல்லா, அதிரை அன்வர் ஆகியோரின் மைத்துனருமாகிய ஹாஜி S.M.S அப்துல் ரவூப் அவர்கள் இன்று  வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நாளை (26-04-2018) காலை 10.30மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Read More

நண்பரின் திருமணத்திற்கு சென்று ஊர் திரும்பும் போது விபத்து..! சம்பவ இடத்தில் வாலிபர் பலி..!!

Posted by - April 25, 2018

பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் சேர்ந்த வாலிபர் வாகன விபத்தில் பலி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் மகன் பைசல் (வயது 24)  இவர்  மதுக்கூரில் ஆட்டோ ஓட்டும் பணி செய்துக்கொண்டு வந்தார். இவர் நேற்று (24.04.2018)செவ்வாய்க்கிழமை இரவு பட்டுக்கோட்டை பள்ளி வாசல் தெருவில் உள்ள தனது நன்பரின் திருமண விழாவிற்க்கு  சென்றுள்ளார். அந்த விழாவை முடித்து விட்டு ஊர் திரும்பும் போது பட்டுக்கோட்டை அருகே உள்ள வளவன்புறம்(கைகாட்டி) புறத்தில் சாலை

Read More

சவுதியில் இடியுடன்கூடிய கனமழை;மக்கள் மகிழ்ச்சி..!!

Posted by - April 25, 2018

சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று (25.04.2018) புதன்கிழமை காலை இடியுடன் கூடிய மழை பெய்துள்ளதாக ஜிதவிலிருந்து நண்பர் தகவல்கள் தெரிவித்தனர். சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் இன்று காலை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சவூதி அரேபியாவில் பொதுவாகவே ஏப்ரல் மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாவே நிலவி இருக்கும்.அச்சமயத்தில் திடிரென்று வானிலை மாற்றம் ஏற்ப்பட்டது.இந்த காரணத்தினால் சவூதி தலைநகர் ரியாத்தில் இன்று காலை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்துவருகின்றது. மழையின் காரணத்தால்

Read More

வாட்ஸ்ஆப் பயன்படுத்த குறைந்தது 16 வயதாவது இருக்கவேண்டும்;அமலுக்கு வருகிறது புதிய விதிமுறைகள்..!!

Posted by - April 25, 2018

புதிய விதிமுறைகள் மற்றும் ஐரோப்பாவில் வாழும் பயனர்களுக்கு இணங்க வாட்ஸ்ஆப் அதன் தேவைகளை மாற்றியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டள்ளது, அதன்படி இனிமேல் வாட்ஸ்ஆப் சேவையைப் பயன்படுத்த குறைந்தபட்டசம் 16வயதாவது இருக்கவேண்டும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. வரவிருக்கும் வாரங்களில் வாட்ஸ்ஆப் புதிய சேவை விதிமுறைகளை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக ஐரோப்பிய பயனர்கள் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்த குறைந்தபட்சம் 16 வயதுள்ளவர்களாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது தகவல் பாதுகாப்பு ஒழுங்குமுறை சார்பில் தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும் இதன்

Read More

உலகின் வயதான மனிதர் மரணம்: வயது என்ன தெரியுமா?

Posted by - April 25, 2018

உலகின் வயதான மனிதர் மரணம்: வயது என்ன தெரியுமா? உலகின் வயதான மனிதராக அறியப்படும் ஜப்பானை சேர்ந்த நபி தஜிமா தனது 117-வது வயதில் மரணமடைந்துள்ளார். இது குறித்த செய்தியை அந்நாட்டின் ஊடகமான கியோடோ வெளியிட்டுள்ளது. கடந்த 1900-ல் பிறந்த நபி வயது முதிர்வு காரணமாக Kikaijima தீவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவரின் உயிர் பிரிந்துள்ளது. இதற்கு முன்னர் உலகின் வயதான மனிதராக அறியப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த ஜமைக்காவை சேர்ந்த வைலண்ட் பிரவுன்

Read More

2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் ஜூன் 16-ந் தேதி பாகிஸ்தானுடன் இந்தியா மோதல்..!!

Posted by - April 25, 2018

உலகக் கோப்பை (2019) போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 4- ந் தேதி நடைபெறவுள்ள ஆட்டத்தில் இந்திய அணி தென்ஆப்ரிக்காவை சந்திக்கிறது.    இங்கிலாந்தில் 2019-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந் தேதி தொடங்கும் இந்த போட்டி ஜூலை 14-ந் தேதி நிறைவடைகிறது. கொல்கத்தாவில் ஐ.சி.சி செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் உலகக் கோப்பை அட்டவணை வெளியிடப்பட்டது அதன்படி,பாகிஸ்தான் அணியுடன் ஜூன் 16-ந் தேதி இந்தியா மோதுகிறது. ஓல்ட் ட்ராஃபோர்டில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. உலகக் கோப்பை போட்டியில் இந்திய

Read More

இனி தமிழ் மொழியிலும் ரயில் டிக்கெட்!!

Posted by - April 25, 2018

தமிழகத்தில் ரயில் டிக்கெட்டுகளில் தமிழ் இடம்பெறவில்லை என்ற குறை இருந்துவந்த நிலையில், ரயில் டிக்கெட்டுகள் தமிழிலும் அச்சிடப்பட்டுள்ளன. முதலில், சென்னை சென்ரல்,திருச்சி, சேலம், மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே இது அமலுக்கு வந்துள்ளது. விரையில் மற்ற ரயில் நிலையங்களிலும் தமிழ் மொழியில் அச்சடிக்கப்பட்ட டிக்கெட் கிடைக்கும் எனவும் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.கேரளாவில், திருவனந்தபுரம்,எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய 4 ரயில் நிலையங்களில் மலையாள மொழியிலும் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் பியூஸ் கோயல் கூறியுள்ளார்.ஏற்கனவே கர்நாடகா மாநிலத்தில் கன்னட மொழியிலும், ஆந்திராவில் தெலுங்கு மொழியிலும் ரயில் டிக்கெட்டுகள் அச்சிட்டு வழங்கப்படுகிறது

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)