அமீரகத்தில் நடைபெற்ற TIYAவின் புதிய நிர்வாகிகள் தேர்வு !

Posted by - April 7, 2018

அமீரக TIYA வின் புதிய நிர்வாகிகள் தேர்வு 06.04.2018 வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்குப் பின் வழமைபோல் துபையில் சகோதரர் N. சேக்காதி அவர்களின் இல்லத்தில் அமீரக தலைவர் N. முகமது மாலிக் அவர்கள் தலைமையிலும் நிர்வாகிகள் மற்றும் முஹல்லாவாசிகள் முன்னிலையிலும் நிர்வாகிகள் தேர்வு சிறப்புற நடைபெற்றது. இந்தப் பொதுக்குழு S. மீரா முகைதீன் அவர்களின் கிராஅத்துடன் துவங்கியது அதனை தொடர்ந்து சகோதரர் S. மீரா முகையிதீன் அவர்கள் வரவு செலவு விபரங்களை பொதுக்குழு உறுப்பினர்கள் முன்

Read More

`தண்ணீரை வங்கியில் டெபாசிட் செய்யணும்’ – போலீஸை மிரளவைத்த போராட்டக்காரர்கள் ..!!

Posted by - April 7, 2018

காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, ரிசர்வ் வங்கியில் தண்ணீரை டெபாசிட் பண்ண வலியுறுத்தும் ஒரு புதுமைப் போராட்டம், புதுக்கோட்டை நகரில் இன்று நடந்தது.     புதுக்கோட்டை நகரைச் சேர்ந்தவர், ஷெரீஃப். இவர், ‘தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி’ ஒன்றை நடத்திவருகிறார். இந்தக் கட்சியின் சார்பாக இவர் புதுக்கோட்டை நகரில் அவ்வப்போது நடத்தும் போராட்டங்கள் வித்தியாசமாக இருக்கும். அரசு ஆஸ்பத்திரியில் பேய்கள் விரட்டும் போராட்டம். இருண்டுகிடக்கும் மகப்பேறு மருத்துவமனைக்கு விளக்கேற்றும் வீதிப்

Read More

அரசு பேருந்தில் பயணித்த பெண்ணின் நகை திருட்டு!!

Posted by - April 7, 2018

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அரசு பேருந்தில் ஒரு பெண் பயணம் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் நகை திருட்டு. பேராவூரணியில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற அரசு பேருந்தில் மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த சரிபா என்னும் பெண்மணி பயணம் செய்து கொண்டிருந்தபோது தன் கையில் அணிந்திருந்த 4 அரை பவுன் வளையலை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து அந்த பெண்மணி உடனே அதிரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் அப்பெண் பயணித்து வந்த அரசு பேருந்தின்

Read More

ஒவ்வொரு மனிதரும் விழிப்படைந்து கொண்டாடவேண்டிய உலக சுகாதார தினம் !

Posted by - April 7, 2018

ஒவ்வொரு மனிதரும் தூய்மையாக இருந்தாலே, இந்த ஒட்டுமொத்த பூமியும் நலம் பெறும் என்பது திண்ணம். உடலும் மனமும் தூய்மையாக இருந்தாலே, பெரும்பாலான நோய்கள் நம்மை அணுகாமலிருக்கும். சுகாதாரம், மனித வாழ்வின் ஆதாரம். இதை மனதில் கொண்டுதான் 1948-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உலக நலவாழ்வு அமைப்பு, 1950-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி, உலக சுகாதார தினமாகக் கடைப்பிடிக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருப்பொருளைக்கொண்டு இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, ‘உலகளாவிய சுகாதார

Read More

நிலக்கரி இறக்குமதிக்கு எதிரான போராட்டம், பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு..!

Posted by - April 7, 2018

புதுவை மாநிலம் காரைக்கால் “மார்க்” தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதால் நாகூர், பட்டினச்சேரி, பனங்குடி சுற்றுவட்டார மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிராக பல்வேறு அமைப்புகளும், கட்சிகளும் பல வகையிலும் போராட்டங்களை நடத்தின. மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் துறைமுக அதிகாரியிடம் பல முறை பேசினார். இதன் ஆபத்து குறித்து சட்டமன்றத்திலும் பேசியுள்ளார். நாகையில் கடந்த பிப்ரவரி 28 அன்று மஜக-வின் 3 ஆம் தொடக்க விழா பொதுக்கூட்டத்தில், நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக அனைவரையும் ஒருங்கிணைத்து, கறுப்புக் கொடியேந்தி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)