அதிரையிலிருந்து பிற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளின் நேர கால அட்டவணை…!

Posted by - March 3, 2018

  தஞ்சை மாவட்டம்;அதிராம்பட்டினத்தில் அதிரையிலிருந்து பிற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளின் நேர கால அட்டவணை அறிமுகம்…   அன்புள்ள அதிரைவாசிகளின் கவனத்திற்க்கு நமதூரிலிருந்து பிற ஊர்களுக்கு செல்வதற்க்கான பேருந்து நேர அட்டவணை இதற்க்கு முன் பதிவிட்டிருந்தோம். தற்ப்பொழுது முத்துப்பேட்டை செல்லும் பேருந்தில் சில நேர மாற்றத்தாலும். கிராமங்கள் செல்லும் பேருந்து நேரங்களும் சேர்க்கப்பட்டு புது பொழிவுடன் இவ் அட்டவணை இக் குழுமத்தில் பதிவிடப்படுகிறது. ஒவ்வொருவரும் இவ் அட்டவணையை save செய்து சொந்தங்கள்,நட்பு வட்டங்கள் போன்றோர்க்கு பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

Read More

தஞ்சை பெரிய கோயிலில் கொள்ளை: ரூ.100 கோடி மதிப்பிலான சிலைகள் திருட்டு…!!

Posted by - March 3, 2018

தஞ்சை பெரிய கோயிலில் இருந்து ரூபாய் 100 கோடி மதிப்பிலான சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில் அமைந்துள்ள தஞ்சை பெரியகோயில் உலக பிரசித்தி பெற்ற கோயிலில் ஒன்றாகும். கட்டிட கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இக்கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. கோயில் கட்டப்பட்டு 1000 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், தற்போது இக்கோயில் இந்திய தொல்லியல் துறையின் கட்டப்பாட்டில் உள்ளது.     இக்கோவிலின் காப்பகத்தில் 13 பஞ்சலோக சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இதில்

Read More

நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்.,அதிரை வருகிறார் சீமான்..!

Posted by - March 3, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் வருகிற (09/03/2018)அன்று மாலை 6மணியளவில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநில தலைவர்  சீமான் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். பட்டுகோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிரை கிளை சார்பில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கொள்கை விளக்க பொதுகூட்டத்திற்கு அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் , உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.

Read More

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு விழா..!!

Posted by - March 3, 2018

தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினத்தில் கடந்த (01.03.2018) வியாழக்கிழமை அன்று கல்லூரியின் விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியின் துவக்கமாக ஒலிம்பிக் தீபத்தை மாணவர்கள் கல்லூரி மைதானத்தை சுற்றிவந்து மரியாதையுடன் ஆரம்பம் செய்தனர். இந்நிகழ்ச்சியில்,பேராசியர்களுக்கான ஓட்ட போட்டி, மாணவர்களுக்கான ஓட்டபோட்டி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில்,வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்,கல்லூரி மாணவர்கள் ,பேராசிரியர்கள் மட்டுமின்றி பல பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Read More

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா…?? உங்கள் நகங்களை வைத்து கண்டுபிடிப்பது எப்படி..??

Posted by - March 3, 2018

நகங்களில் உண்டாகும் மாற்றங்கள், தோற்றம், நிறம் மாறுதல், நகம் வலுவிழந்து போவது போன்றவற்றை வைத்து உங்கள் உடலில் எந்த உறுப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறியலாம். நகம் குழி போன்று காணப்படுவது ஸ்பூன் குழி போல நகம் உள்வாங்கி காணப்படுவது, இரும்புச்சத்து குறைபாடு, இரத்தசோகை போன்றவற்றின் அறிகுறியாக கருதப்படுகின்றன. மேலும், இது இதய நோய்கள் மற்றும் தைராய்டு சுரப்பிக் குறைபாட்டின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். நகம் குவித்து காணப்படுவது தொடர்ந்து வருடக்கணக்கில் நகம் சற்று மேடு போல குவிந்து

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)