Saturday, April 20, 2024

மோடி அரசின் A- Z முறைகேடுகளைச் சொல்லும் புதிய இணையதளம் !

Share post:

Date:

- Advertisement -

ரஃபேல் விவகாரத்தில் முன்னாள் பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே வாக்குமூலத்தால் பா.ஜ.கவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பிரெஞ்சு ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர் “இந்திய அரசின் வலியுறுத்தலின் பேரில்தான் ரஃபேல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸுக்கு வழங்கினோம்” எனக்கூற, அது பெரும் சர்ச்சையானது.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் ரிலையன்ஸ் – டசால்ட் ஒப்பந்தம் குறித்து மோடி அரசை விமர்சித்து வருகின்றன. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுக் காலத்தில் மோடி அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், முறைகேடுகள் அனைத்தையும் தொகுத்து புதிய இணையதளம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறது காங்கிரஸ்.

ரஃபேல் ஊழல் ஒரு பார்வை – இதுவரை என்ன நடந்தது?
இந்தத் தளத்தில் இதுவரை இந்த அரசின் மீது எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் A,B,C,D என Z வரை முறையாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அதுதொடர்பான வீடியோக்கள், செய்தி இணைப்புகள் போன்றவையும் அதிலேயே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த http://www.corruptmodi.com/ இணையதளம் குறித்து காங்கிரஸ் இன்று ட்வீட் செய்யவும், உடனே சமூகவலைதளங்களில் வைரலாகத்தொடங்கிவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...