அதிராம்பட்டினம் லயன்ஸ் கிளப் மற்றும அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 இணைந்து அழிந்து வரும் சிட்டுக்குருவி இனங்களை பாதுகாக்க
சிட்டுக்குருவி கூண்டுகள் வழங்கும் நிகழ்ச்சி (21.07.2018 )இன்று காலை அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்க தலைவர் பேரா.முகம்மது அப்துல்காதர் தலைமையேற்று வரவேற்புரை ஆற்றினார் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்ற தலைவர் வ.விவேகானந்தம் சிட்டுக்குருவிகள் பற்றிய அறிய தகவல்களை விவரித்தார் .
நிகழ்ச்சியில் லயன் ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
லயன்ஸ் சங்க நிர்வாகிகள் சூப்பர் அப்துல்ரஹ்மான், பொருளர் அப்துல் ஜலீல்தீன், நிர்வாகிகள் லயன் முகம்மது முகைதீன் லயன் அப்துல்ஹமீது லயன் ஆறுமுகசாமி லயன் செல்வராஜ் லயன் குப்பாஷா கபீர் மற்றும் சுற்றுச்சூழல் மன்ற நிர்வாகிகள் முத்துக்குமரன் பேரா.அப்துல்காதர் கலந்து கொண்டனர்.
இறுதியாக லயன் பேரா.செய்யது அகமது கபீர் நன்றி கூறினார்.
Your reaction