தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள VRV மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.
முகாமில் சென்னையிலிருந்து எலும்பு முறிவு,பொது நல மருத்துவர்,மகப்பேறு,குழந்தைகள் நல மருத்துவர்,அறுவை சிகிச்சை மருத்துவர் உள்ளிட்ட பிரிவுகளில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கலந்துக்கொண்டு சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
மேலும் இம்முகாமில் ஈசிஜி,சர்க்கரை நோய்,இரத்த அளவு,இரத்தக் கொதிப்பு உள்ளிட்ட பரிசோதனைகளும் செய்யப்படுகிறது.
உதவி:- மல்லி நியூஸ் அப்துல் ரஜாக்.
Your reaction