அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட பகுதிகளுக்கு தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
பேரூராட்சி பொது நிதியில் இருந்து அமைக்கப்படும் இச்சாலை பணிகள் தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் டெண்டர் பெறப்பட்டு ஒப்புதல் அளிக்கபடுகிறது.
இந்நிலையில் காலேஜ் முக்கம் முதல் சேர்மன் வாடி வரையிலும்.போடப்பட்டு வரும் தார் சாலை தரமற்றுள்ளதாகவும், இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வள்ளவு ஒப்பந்ததாரர் விபரம் ஆகியவைகளை உடனடியாக வெளியிட வேண்டும், தரமற்ற சாலையாக இல்லாமல் நல்ல தரத்தில் இருக்க வேண்டும், முன்பிருந்த பழையை தார் சாலையை அகற்றப்பட்ட பின்னரே புதிய சாலைகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பினர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை விடுத்தனர்.
இதில் ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அணி தலைவர் அனஸ்,துனை தலைவர் மரைக்கா இதீரீஸ்,நதக மாவட்ட பொருளாளர் ஜியாவுதீன், சமூக ஆர்வலர் ஹாலிக் மரைக்காயர், வழக்கறிஞர் முஹ்ஹமது தம்பி, அய்வா சங்க ஹசன்,நெய்னா,ரஜாக்,ரஹீம் LMS அபூபக்கர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு டெண்டர் நகலை பெற்றுகொண்டனர்.
Your reaction