வாஜ்பாய் மறைவு … தமிழகம் உட்பட பல மாநிலங்களில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு !

1091 0


உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று மாலை 5.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் 7 நாட்கள் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அரசின் நிகழ்ச்சிகள் 7 நாட்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

வாஜ்பாயின் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழக அரசும் அறித்துள்ளது. நாளை வெள்ளிக்கிழமை (16-08-2018) தமிழகத்தில் அரசு விடுமுறை என்றும் பள்ளிகள் , கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்றும் தமிழகத்தில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதுச்சேரி , கர்நாடகம் , மத்திய பிரதேசம் , பஞ்சாப் , ஜார்கண்ட் போன்ற இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வாஜ்பாயின் மறைவையொட்டி நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: