இந்திய சுதந்திரமும் இன்றைய ஆட்சியும்..

877 0


 

இந்தியா வெள்ளைக்காரன் வச்ச பேரு. கிழக்கிந்திய கம்பெனிகள் நம்முடைய தேசத்தை அதனுடைய வளங்களை நம்மக்களின் உரிமைகளை அடிமையாக வைத்திருந்து ஆட்சி புரிந்தன…

அவன் ஆட்சியில் இருக்கும்பொழுது அவனுக்கு என்னமோ கப்பம் கட்டி வந்தோம். அவன் நமக்காக பல பாலங்கள் போக்குவரத்து சாலைகள் இரயில் நிலையங்கள். இன்னும் பல அதியசய தக்க கட்டிடங்கள் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தினான்.

இதையெல்லாம் நாம் பொருட்படுத்தாமல் நாம் அவனுக்கு அடிமையாக இருந்ததை உணர்ந்தோம்.

காரணம் நம் வளங்களை சுரண்டினான் நம்மை அடிமையாகவே வைத்திருந்தான் என்பதற்காக இந்திய மக்கள் போராடி பெற்ற சுதந்திரம்.

அப்பொழுதெல்லாம் இந்திய மக்கள் எந்த பாகுபாடுமின்றி எந்த மத சாயலுமின்றி ஒருங்கே இருந்து எதிர்க்குரல் எழுப்பினார்கள் ஆர் எஸ் எஸ். அமைப்பைத்தவிர.

வெள்ளைக்காரனிடம் நாம் அடிமையாக இருப்பதை உணர்ந்து. சுபாஷ் சந்திரபோஸ் காந்திஜி போன்றோர் அறப்போர் அஹிம்சைவழியை கையாண்டார்கள்.

வெள்ளைக்காரனுக்கு முழு ஒத்துழைப்பும் தந்தவர்கள் ஆர் எஸ் எஸ்.அதற்கு உதாரணம் அன்றே.

கோல்வாக்கர் இவ்வாறு கூறினான்.
இந்துக்களே உங்களுடைய நேரங்களை வெள்ளைக்காரனை எதிர்ப்பதில் வீணடிக்கவேண்டாம். நம்முடைய எதிரிகளான முஸ்லிம் கிருஷ்த்துக்கு எதிராக போராடி வெல்வோம் என்றான்.

அவன் கிழக்கிந்திய கம்பெனிகளுக்கு சர்வ ஏஜென்ட்டாக பணிபுரிந்தான் என்றால் அது மிகையாகாது..

பல சூழ்ச்சிகளை ஆர் எஸ் எஸ் கையில் எடுத்தது.அதில் மிகப்பெரும் வெற்றியாக காந்தியை கொல்வதே நோக்கமாக கொண்டு செயல்பட்டு நாதூரம் மூலமாக கொலையும் செய்தார்கள்..

இப்புடி இந்திய கரைகள் இருக்க.

அன்றைய முஸ்லிம்கள் ஆங்கில மொழியை கற்க தடை விதித்தார்கள் தேவ்பந்த் மதரசா மூலமாக அந்த அறிவிப்பு வெளிவந்தது. அதன்பிறகு பல நூறு இஸ்லாமிய மார்க்க போதகர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.

நேதாஜி படைக்கு முஸ்லிம்கள் பொருளாதார உதவி செய்திட்டார்கள்.பலபேர் சிறைச்சாலைக்கு சென்ற தடயங்களும் ஒவ்வொரு மரத்திலும் தூக்கில் தொங்கவிடப்பட்ட சாட்சிய கூறுகளும் இன்னும் ஏனைய வரலாற்று பதிவுகளும் செய்திட்ட தியாகங்கள் நினைவு கூறும்..

இந்தியநாடு சுதந்திரம் அடைந்ததை அன்றைய இந்திய மக்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். ஆர் எஸ் எஸ் என்ற பயங்கரவாத அமைப்பைத்தவிர.

அதற்கான காரணத்தை வரலாற்று ஏடுகளில் தேடிக்கொள்ளுங்கள்..

ஆனால் இன்று அந்த சுதந்திரம் இந்திய மக்களின் மனதில் நிழலாடிக்கொண்டிருக்கிறதா என கேள்வி எழுப்பினால். ஒரு கணம் சந்தேகப்படாமல் இருக்க முடியவில்லை.

காரணம்.
பன்முகுகத்தன்மை கொண்ட ஜனநாயகநாட்டில். இந்து என்கின்ற ஒற்றை முழக்கமும். பாரத்மாதாகி ஜே என்ற கோஷமும் சொன்னால்தான் இந்தியாவில் இருக்க முடியும் என்ற நிலையை உருவாக்கி வருகிறது. ஆர் எஸ் எஸ்.

மதக்கலவரங்களை ஊக்குவிக்கிறது. சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய விஷ கருத்திற்கு முக்கியத்துவம் தருகிறது..

கொலைகளும் கற்பழிப்பு சம்பவங்களும் மதவழிபாட்டு இடங்களை இல்லாமல் இருக்க எடுக்கும் அழிவு திட்டங்களும் அதிகமாகிவிட்டன.

அன்று அவனுக்கு வரி கட்டினோம்.
இன்று இவர்களுக்கு வரி கட்டுகிறோம்.

அன்று அவன் வளங்களை கொள்ளை அடித்தான்
இன்று இவன் வளங்களை விற்று கொள்ளையடிக்க ஆரம்பித்துள்ளான்..

அன்று அவன் நம்மை அடிமையாக்கி அச்சறுத்தி ஆட்சி புரிந்தான்.
இன்று இவன் அச்சுறுத்தி ஆட்சி செய்துவருகிறான்..

இரத்தம் பார்க்க துடிக்கும் காட்டுமிராண்டிகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து ஆட்சி செய்கிறார்கள்.

இவர்களுக்கும் இந்திய சுதந்திரத்திற்கும் எந்த பங்கும் இல்லை என்பது வரலாற்று பதிவுகளே சான்றானது. ஆனால் அதை அழித்துவிட்டு புதிய இந்தியா என்ற பெயரில். சாத்தான்கள் வேதம் ஓதினால் எவ்வாறு இருக்குமோ அதுபோன்று.

தேசியவாதி என பெயரிட்டு தங்களுக்கு ஒரு வேதத்தை ஏற்படுத்தி இந்தியாவையும் இந்திய மக்களையும் சீரழிக்க நினைக்கிறார்கள்.

இன்னுமோர் சுதந்திரத்திற்கு மக்கள் நாம் ஒன்றினைவோம்..
அன்றுதான் இந்திய தேசம் முழுமைபெறும்..

ஜியாவுதீன்.Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: