நாடெங்கும் இந்தியாவின் 72வது சுதந்திர தின விழா மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அவ் வகையில் நமதூர் அதிரை இமாம் ஷாஃபி பள்ளியிலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
முன்னதாக 9ம் வகுப்பு படிக்கும் மாணவர் MY.அஹமது கிராஅத் ஓதிய பின், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் T.நயீம் விழாவில் கலந்து கொண்டவர்களை வரவேற்றார்.
இவ் விழாவிற்கு பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் ஹாஜி ஜனாப்.OKM.ஷிபகதுல்லாஹ் அவர்கள் முன்னிலை வகிக்க, அதிரை நகர சுற்றுச்சூழல் மன்றத் தலைவர் V.விவேகானந்தன் M.A., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நாட்டின் தேசிய கொடியை ஏற்றி வாழ்த்துரை வழங்கினார்.
இதன் பின்னர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
குறிப்பாக கடந்த மாதம் அதிரையில் உள்ள ஒரு ATM இயந்திரத்தில் அருகஎ இருந்த குறிப்பிடதக்க ஒரு ரொக்கத்தை காவல்துறையினரிடம் ஒப்படைத்த அப் பள்ளியின் பயிலும் மாணவர்கள் அப்சர் மற்றும் சுஹைலுக்கு சுற்றுச் சூழல் மன்றத் தலைவர் மாணவர்களின் நேர்மையை பாராட்டி பரிசுகளை வழங்கினார்.
இதுதியாக +2 மாணவர் F.பௌஜான் நன்றியுரை கூறினார்.
Your reaction