இந்திய நாட்டின் 72-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக அதிரையிலும் இன்று காலையே பல்வேறு சங்கங்கள் , அரசு அலுவலகங்கள் , பள்ளிகள் போன்றவற்றில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் அதிரை பேரூராட்சியின் சுகாதார ஆய்வாளர் திரு.அன்பரசன் தேசியக் கொடியேற்றினார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் பேரூராட்சி ஊழியர்கள் , பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
Your reaction