பத்து இரவுகளின் மீது சத்தியமாக
(அல்குர்ஆன் : 89:2)
திருக்குர்ஆனில் பத்து இரவுகளின் மீது இறைவனே சத்தியம் செய்து கூறும் அளவு உன்னதமான நாட்களே
துல்ஹஜ் பிறை ஒன்று முதல் அதன் இறுதி பத்து வரை உள்ள நாட்கள் ஆகும்
எவ்விதமான எதிர்பார்ப்பும் இன்றி நிமிடங்கள் நம்மை விட்டு கடப்பதை போல் நாமும் நம்மை தாண்டி செல்லும் நிமிடங்களை எதிர்பார்ப்பில்லாது பயனற்று கடந்து போனால் அதனால் ஏற்படும் மறுமை நஷ்டங்கள் நம்மை தான் வந்து சாரும்
ஹஜ்ஜுப் பெருநாளை எதிர்பார்ப்பது பெரிய காரியமல்ல
மாறாக அந்த நாள் நம்மை வந்தடைவதற்க்கு முன் சிறப்பான ஹஜ்ஜுப் பெருநாட்களின் பத்து நாட்களையும் நமது நல்ல அமல்கள் மூலம் அதிகமாக அலங்கரிக்க முயற்சிக்க வேண்டும்
எது மாதிரியான அமல்களை இந்நாட்களில் செய்ய வேண்டும் என்பதற்க்கு வரைமுறை நபியவர்களால் நிபந்தனை சொல்லப்படவில்லை
ஆனால் எந்த அமல்களை செய்தாலும் அதற்க்கு மகத்தான நற்கூலி மறுமையில் கிடைக்கும் என்பதற்க்கு நபிகளாரின் உத்திரவாதம் மாத்திரம் ஆதாரப்பூர்வமாக அமைந்துள்ளது
தான தர்மங்களால் நற்சொற்களால் நல்ல பல பணிகளால் திக்ருகளால் இதர வணக்க வழிபாடுகளால் நம்மால் இயன்ற வரை பத்து நாட்களையும் செயல்களின் மூலம் அலங்கரிப்போம்
அதன் மூலம் மறுமையில் மகத்தான பரிசுகளை பெற இறைவன் முன்னனியில் இடம் பிடிப்போம் இன்ஷா அல்லாஹ்.
அல்லாஹ்விடத்தில் இந்த ( துல்ஹஜ் பத்து) நாட்களை விட மகத்தான நாள் வேறு இல்லை
இன்னும் இதை விட நல்லறங்கள் செய்யும் நாட்களில் மிகவும் விருப்பத்திற்க்கு உரிய நாட்கள் வேறு இல்லை
எனவே இதில் அல்லாஹ்வை அதிகமாக தஸ்பீஹ் செய்யுங்கள
என்று நபி ( ஸல்) அவர்கள் கூறியதாக
அத்தப்ரானி அஹ்மத் 6154 எண்
ஹதீசில் காணப்படுகின்றது
நட்புடன் J . இம்தாதி
Your reaction