தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காந்தி நகரில் தீ விபத்து ஏற்பட்டு குடிசை எரிந்து சாம்பலானது.
காந்தி நகரில் வசிக்கும் மாரியப்பன் என்பவரின் வீடு இன்று இரவு எதிர்பாராத விதமாக தீ பிடித்தது. கண் இமைக்கும் நேரத்தில் தீ மலமலவென குடிசை முழுதும் பரவியது.
இதனை கண்ட பொதுமக்கள் பலர் எரிந்துகொண்டிருந்த மாரியப்பனின் குடிசையில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தண்ணீரை வாரி இரைத்தனர்.
இருப்பினும் இந்த தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் பொதுமக்கள் தினறினர்.
இதனால் மாரியப்பனின் வீடு முழுவதுமாக எரிந்து சாம்பலானது.
முன்னதாக குடிசையில் தீ விபத்து ஏற்பட்டதும் உடனடியாக தீயணைப்பு துறைக்கு பொது மக்கள் தகவல் கொடுத்தும் உரிய நேரத்தில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வராததே குடிசை முழுவதுமாக எரிந்ததற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
தீ விபத்துக்கள் ஏற்படும் நேரத்தில் பெரும் அசம்பாவிதங்களை தவிர்க்க வேண்டுமெனில், தீயணைப்பு வீரர்கள் உரிய நேரத்தில் சம்பவ இடத்திற்கு வரவேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளனர்.
Your reaction