அதிராம்பட்டினம் கடற்கரை தெரு தீனுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சங்க நிர்வாகத்தின் புதிய நிர்வாகிகள் அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் வளர்ந்து காணப்படும் காட்டு கருவேல மரங்களை வேரோடு அழிக்க திட்டமிடப்பட்டு அதற்காக ₹50ஆயிரம் ரூபாயை ஒதுக்கீடு செய்தனர்.
இத்தொகையில் இருந்து கருவேல மரங்கள் அடர்த்தி மிகுந்து பகுதியாக உள்ள வெட்டி குளக்கரையில் JCB இயந்திரம் உதவியுடன் மரங்களை வேரோடு பிடுங்கி எடுத்து வருகின்றனர்.
மக்கள் நலப்பணிகளில் அக்கறையற்று இருக்கும் பேரூர் நிர்வாகத்தை நம்பாமல் சுய தேவையை சொந்த பணத்திலிருந்து நிறைவேற்றி கொள்ளும் இப்போக்கு சமிப நாட்களாக அதிகரிக்க தொடங்கி விட்டது.
கப்பம் மட்டும் கட்ட சொல்லும் பேரூராட்சி நிர்வாகம்… இது போன்று கப்படிக்கும் நிலையை மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.
Your reaction