திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுபெரும் தலைவரும் முன்னால் முதல்வருமான கலைஞர் கருணாநிதி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவரது மறைவையொட்டி பல்வேறு ஊர்களில் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதே போல் அதிரை நகர திமு கழகத்தின் சார்பில் இன்று பேரூந்து நிலையத்தில் இருந்து கலைஞருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக பேரணி நடைபெற்றது.
இந்த அமைதிப் பேரணியில் திமுக நிர்வாகிகள், முன்னால் பேரூர் தலைவர்,மகளிர் அணி, பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
Your reaction