குழந்தைகளின் விளையாட்டில், பெற்றோர்களின் பங்கு அரணா..ஆபத்தா..??

1939 0


நம்முடைய பழமையான விளையாட்டுக்களை மறந்துவிட்டு பேசுவதர்க்காக கண்டுபிடிக்கப்பட்ட செல்போன், டேப்லெட் உள்ளிட்ட  கேம்ஸ் விளையாடுவதை நோக்கியே இன்றைய குழந்தைகள் ஆர்வமாக ஆபத்தில் பயணிக்கிறார்கள்.

இதனால், குழந்தைகளுக்கு உண்டாகும் உடல்நலம்,மனநலம்சிக்கல்கள் விளைவுகள் ரொம்பவே அதிகம்.இந்த உலக ஆபத்தான காலத்தில் போன் பயன்படுத்துவது பேசுவதற்கு அல்ல , கேம்ஸ் விளையாடுவதற்கு மாறிவிட்டது.

இதற்கு யார் காரணம் என்று பார்ப்போம்..!!

குழந்தைகள் அவங்களாகவே எதையும் கற்று கொள்ளவில்லை. பெற்றோராகிய நாம் செய்வதைப் பார்த்துதான் செயல்படுறாங்க. செல்போன், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட நாம் அதிக நேரம் நேரத்தைச் செலவழித்தால், குழந்தைகளும் அதையெல்லாம் பயன்படுத்த ஆசைப்படுவாங்க.

“தாய் போல பிள்ளை…
நூலை போல சேலை…”

இன்றைய  இளம் பெற்றோர்கள் , பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தீங்கு ஏற்பாடும் அனைத்தும் வாங்கி கொடுக்கிறார்கள். வாங்கும்போது விளைவு தெரியாது , வாங்கி கொடுத்தால் தான் பாசம் என்று எண்ணிகிறீர்களா..?? இல்லவே இல்லை குழந்தைகளுக்கு தீங்கு  விளைவிப்பதை தான் வாங்கி கொடுக்கிறீர்கள் எண்ணிக்கொள்ளுகள்.

சரி வாங்கி கொடுத்துவிட்டாச்சு… தீங்கு என்றும் தெரிகிறது.. ஆனாலும்

பெற்றோர்களாகிய நாம் வேலை செய்வதற்காக…

குழந்தைகள் அடம்பிடிக்கிறதைத் தவிர்க்க, செல்போனை விளையாட கொடுத்துடறாங்க. இந்தச் செயல்பாடுதான் குழந்தைகளுக்குத் தொடர்ந்து செல்போன் கேம்ஸ் பயன்பாட்டு ஆர்வத்தை அதிகப்படுத்தும்.

அந்த காலத்தில் குழந்தைகள் அழுதால் பெற்றோர்கள் தாலாட்டுகளை பாடி ஆறுதல் படுத்தினார்கள் . இதனால் அவ்விருவர்களிடையே பாசம் அதிகரித்தது.ஆனால் இக்கால நவீன பெற்றோர்கள் குழந்தைகள் அழுதால் உடனே செல்போனை கொடுத்து விட்டு வேலையை சுலபமாக முடிக்க பார்க்கிறார்கள்.

“அக்காலத்தில் பிள்ளைகள் தூங்குவதற்கு தாயின் தாலாட்டு ஒளி”

“இக்காலத்தில் பிள்ளைகள் தூங்கிவதற்கு தாயின் செல்போன் ஒலி”

நான் ஒரு பிள்ளைகளிடம் கேட்டேன்  அம்மா பிடிக்குமா..??அப்பா பிடிக்குமா…?

பிள்ளைகள் கூறுவது எனக்கு அன்ரொய்டு போன்
தான் பிடிக்கும் என்று சொல்லுகிறது அந்த நிலைக்கு  பெற்றோர்கள் சிறப்பாக  வளர்த்து இருக்கிறாராகள்.

குறிப்பு: நாம் யாருடன் அதிக நேரம் செலவழிகின்றமோ அவர்களிடம் தான் நம் பாசம் அதிகரிக்கும்…

நாள் முழுதும் பாசத்தை ஊட்டி வளர்க்கும் அன்ரொய்டு போன்..

இது குழந்தை பருவத்திலிருந்து இப்போ 10,12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வரை மட்டும் அல்ல சில பெற்றோர்களே கேம்ஸ் விளையாடுகிறாராகள்.அதுவும் பிள்ளைகளுடன் போட்டி போட்டு கொண்டு விளையாடுறார்கள்.

இப்படியே இருந்தால் நாடு சீக்கிரமே வல்லரசு நாடாக மாறிவிடும்.

இதனை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கேம்ஸ் விளையாட கொடுக்காதீர்கள்… மாறாக பழமையான விளையாட்டை கற்று கொடுங்கள்..

பழமையை அடுத்த தலைமுறைக்கு சேர்த்துவிடுங்கள் அளித்துவிடாதீர்கள்…

கேம்ஸ் விளையாடினாள் விளைவுகள் என்னவாகும் என்று அடுத்த பதிவில் பார்ப்போம்..

காத்திருங்கள் இணையதுடிப்புடன்

ஆக்கம்: ஃபாய்ஜ் அஹமது பின் ஹிதாயத்துல்லாஹ்

 

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: