தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பழஞ்செட்டித் தெருவை சேர்ந்தவர் அப்சர். இவர் அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய நண்பர் சுஹைல். இவரும் அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். அப்சர் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் தனது நண்பர் சுஹைலோடு இந்தியன் வங்கி ஏடி.எம்மில் பணம் செலுத்துவதற்காக சென்றுள்ளார். அங்கு சென்று ஏடிஎம்மில் பணம் டெபாசிட் செய்ய முயன்றுள்ளார். அப்போது அந்த ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வைக்கும் இடத்தில் ரூ.45 ஆயிரம் இருந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த இருவரும் அந்த பணத்தை எடுத்து கொண்டு அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அதிரை பள்ளி மாணவர்களின் இந்த நேர்மைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த இரு மாணவர்களுக்கும் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Your reaction