அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் நடத்தும் 15 ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் பல ஊர்களில் இருந்து தலைசிறந்த அணிகள் பங்கு பெற்று விளையாடி வருகின்றனர்.
இன்றைய தினம் நடைபெற்ற போட்டியில் தென்னரசு பள்ளத்தூர் – அதிரை SSMG அணிகள் மோதின.
முன்னதாக இவ்வாட்டத்தினை மிஷ்கின் சாஹிப் பள்ளி ஜமாஅத் நிர்வாகிகள் துவக்கி வைத்தனர்.
முதல் பகுதி நேர ஆட்டம் வரை இரு அணிகளும் கோல் ஏதும் போடமல் ஆடி முடித்தனர்.
இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் பள்ளத்தூர் அணி 2 கோல்களும், அதிரை SSMG 1 கோலும் அடித்தது.
இறுதியாக தென்னரசு பள்ளத்தூர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
அதிரை SSMG அணிக்கு அவ்வப்போது கோல் அடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தும் அதை வீரர்கள் நழுவ விட்டது தோல்விக்கான முக்கிய பங்காக உள்ளது.
நாளைய தினம் சிவகங்கை – சென்னை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
Your reaction