கல்விகண் திறந்த காமராஜரின் பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைப்பெறுகிறது.
அந்த வகையில்.இன்று அதிராம்பட்டினம் நடுதெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அதிரை ரோட்டரி சங்க தலைவர் Rtn முஹம்மது ஷம்சுதீன் தலைமையில் நோட்டு, எழுது பொருட்கள் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன.
இதில் பள்ளியின் முதல்வர் மாலதி, டேவிட் ஆரோக்கியராஜ், ரோட்டரி சங்க நிர்வாகிகளான அய்யாவு, நவாஸ், வெங்கடேஷ், மன்சூர்,உதயகுமார்,சலாஹுதீன், சமூக ஆர்வலர் ஜாகிர் உசேன்
உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Your reaction