தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி,நாடியம் மின்வாரியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக தொடர்ந்து வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படுத்துகின்றனர்.
மல்லிப்பட்டினம்,புதுப்பட்டிணம்,செந்தலை,மரக்காலசை போன்ற பெரும்பான்மையாக முஸ்லீம்கள் வசிப்பதால் வெள்ளிக்கிழமை மின்தடையால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஆகவே இந்த மின்தடையை மாதத்தின் வேறொரு கிழமைகளில் மாற்றக்கோரி செந்தலை,மல்லிப்பட்டினம், மரக்காலசை,புதுப்பட்டிணம் ஆகிய ஊர்களின் ஜமாஅத் நிர்வாகத்தின் கடிதத்துடன் SDPI கட்சியின் நிர்வாகிகள் இன்று (13.7.2018) பொறியாளரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
SDPI கட்சியின் தஞ்சை மாவட்ட பொதுச்செயலாளர் மதுக்கூர் ரஹீஸ்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஔரங்கசீப், மல்லிப்பட்டினம் SDPI கட்சி நகரத்தலைவர் பஹத் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துர் ரஹ்மான் ஆகியோர் சந்தித்து மனு கொடுத்தனர்.
Your reaction