நாமக்கல்லில் ஆய்வு செய்ய வந்த ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவித்த போது கைது செய்யப்பட்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின் , இதுவரை விடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த திமுகவினர் மத்திய மாநில அரசுகளை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன்தொடர்ச்சியாக மத்திய மாநில அரசுகளை கண்டித்து இன்று தஞ்சையில் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமையில் முன்னாள் மாவட்டப் பொருப்பாளர் து. செல்வம் , அதிரை பேரூர் கழக துணைச் செயலாளர் A.M.Y.அன்சர்கான் மற்றும் கழகத் தொண்டர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் மு.க. ஸ்டாலின் அவர்களை உடனே விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்த காவல்துறையினர் தஞ்சை கொடிமரம் மார்க்கெட் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்தனர்.
Your reaction