அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2019 ஜனவரி முதல் பால், தயிர் தவிர்த்து மற்ற பொருட்களை பிளாஸ்டிக்கில் விற்க தடை விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். இது பற்றி பேசிய அவர் மழைநீர் கால்வாய்களை அடைத்த வெள்ளம் ஏற்பட பிளாஸ்டிக் முக்கிய காரணமாக இருப்பதாக குறிப்பிட்டார்.

Your reaction